\
Election in India
Election in Indiapti / ai

கட்சி மாறிய 111 எம்.பி., MLA! ADR வெளியிட்ட முக்கிய தகவல்... கட்சி தாவல் தடை சட்டத்தில் மாற்றமா?

ஜனநாயக சீர்திருத்த சங்க ஆய்வின்படி, 2022 முதல் இதுவரை 26 மக்களவை எம்.பி.,க்கள், 7 மாநிலங்களவை எம்.பி.,க்கள், 78 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். கட்சித்தாவல் சட்டத்தை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Published on: 
Summary

நாட்டில் கட்சி தாவல் அதிகரித்து வருவதை ADR ஆய்வு வெளிப்படுத்துகிறது. 26 லோக்சபா, 7 ராஜ்யசபா எம்.பி.,க்கள், 78 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ள நிலையில், நாகாலாந்து, மேற்கு வங்கம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

கடந்த 2022 முதல் தற்போது வரை, நாட்டில் நடந்த லோக்சபா, ராஜ்யசபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற 111 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளதாக ADR அதாவது ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 26 லோக்சபா எம்.பி.,க்கள், 7 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் 78 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் கட்சி மாறியவர்கள் மட்டுமின்றி, கட்சி இணைப்பு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தகுதிநீக்கத்துக்குப் பின் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 தேர்தல்
தேர்தல்chat gpt

மாநிலங்களைப் பொறுத்தவரை, நாகாலாந்தில் அதிகபட்சமாக 25 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 20 எம்.பி.,க்களும், தெலுங்கானாவில் 9 எம்.எல்.ஏ.,க்களும், கோவாவில் 8 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறியுள்ளனர். பஞ்சாபில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களும், மஹாராஷ்டிராவில் 6 எம்.பி.,க்களும் கட்சி மாறியுள்ளனர்.

Election in India
சொத்தில் 55% அரசுக்கா? சபீர் பாட்டியாவின் அதிரடி யோசனை! Inheritance Tax என்றால் என்ன?

மேகாலயாவில் 6, மணிப்பூரில் 5, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா 4, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 2 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறியுள்ளனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சிக்கிம், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு எம்.எல்.ஏ.,வும், டில்லியில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் கட்சி மாறியுள்ளனர்.

Parliament
ParliamentReuters

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகர்களிடம் இருந்து மாற்ற வேண்டும் எனவும், எம்.பி.,க்கள் தொடர்பான விவகாரங்களில் ஜனாதிபதிக்கும், எம்.எல்.ஏ.,க்கள் விவகாரங்களில் கவர்னர்களுக்கும் இந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் பரிந்துரைத்துள்ளது. மேலும், தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், கட்சி மாறியவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வரை அரசு அல்லது அமைச்சர் பதவிகளை வகிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Election in India
ஜார்க்கண்ட்| வங்கியில் ரூ.33.60 கோடி கொள்ளை.. துப்பாக்கி முனையில் திருடிச்சென்ற கும்பல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com