பொது விடுமுறை கோரிக்கை... நாடெங்கும் பற்றிக் கொண்ட ராமர் கோயில் திறப்பு விழா ஜுரம்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள சூழலில், நாடு முழுவதும் அதுகுறித்தான பேச்சே காணப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்pm modi

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடுமுழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களும் அங்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது, அயோத்தி ராமர் கோயில் திறப்பு. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டோம் என சிலர் கூறுவது விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறையும், சில மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் முழுநாள் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

உச்ச நடிகர் ஒருவரின் திரைப்படம் வெளியீடு, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐபிஎல் போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் ஏற்படும் இயற்கையான ஆர்வத்திற்கு சற்றும் சளைப்பில்லாமல் ராமர் கோயில் திறப்பு குறித்தும் ஆட்சியாளர்களால் பேசப்படுகிறது. எங்கு திரும்பினும் அயோத்தி என்ற பேச்சு கேட்கும் அளவிற்கு செயல்பாடுகள் உள்ளன.

அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்pt web

அயோத்தி ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அயோத்தியில் ராமர் கோயிலை அரசியல் திட்டமாக கட்டி வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோவில் விழா புறக்கணிப்பு; காங்கிரஸின் அறிவிப்புக்கு எதிராக ஒன்று திரண்ட பாஜக தலைவர்கள்

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் 22 ஆம் தேதி பங்குச்சந்தைகள் இயங்காது என மும்பை பங்குச்சந்தை அறிவித்துள்ளது. 22-ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் நிலையில் அதற்கு பதில் இன்று பங்குச்சந்தைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களுக்காக விடுமுறை

22 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ராம ஜென்ம பூமி
ராம ஜென்ம பூமிPT

பல்வேறு மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, புதுச்சேரி போன்ற சில மாநிலங்களில் பொதுவிடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவினர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில்
ராமர் கோயில் திறப்பு; பார்கவுன்சில் & ஊழியர்களின் கோரிக்கை; அரைநாள் விடுமுறை அளித்த மத்திய அரசு

அதேபோல் நிகழ்வுக்கு நேரில் வராமல் அவரவர் மாநிலங்களில், மக்களுடன் கொண்டாடுமாறு பாஜக தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமான கூட்டத்தை தவிர்க்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் வரலாற்றை பேசும் 695

ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி நாடுமுழுவதும் உள்ள புனிதத் தலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். அதனையொட்டி தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் பலரும் கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஷதானி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜ்னீஷ் பெர்ரி இயக்கியுள்ள 695 திரைப்படம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள், அதனையொட்டி நடந்த சம்பவங்களை விவரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் இத்திரைப்படம் ரூ.15 லட்சம் வசூலை எட்டியுள்ளதாக திரைப்படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குறிப்பிடும் sacnilk தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில்
“ஹனுமான் படக்குழு ஒவ்வொரு டிக்கெட்டிலும் ரூ.5-ஐ அயோத்தி கோவிலுக்கு வழங்கும்” - சிரஞ்சீவி

அதேபோல் பல்வேறு திரைப்பிரபலங்களும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பேசியபடியே இருந்தனர். அயோத்தி கோயில் கமிட்டியிடம் இருந்து அழைப்பிதழ்களை பெற்றவர்களில் சிலர், ராம் சரண், கங்கனா ரனாவத், ரஜினிகாந்த், விராட்கோலி - அனுஷ்கா ஷர்மா. இவர்களைத் தாண்டி சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் தங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்துள்ளதாகவும், தாம் நேரில் குடும்பத்துடன் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநாளில் மக்கள் கவனத்தை ஈர்க்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் 

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிpt web

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதியை தங்களுடைய நாளாக மாற்றும் முயற்சியிலும் அம்மாநில ஆளும் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேற்குவங்கத்தில் ஜனவரி 22-ஆம் தேதி நல்லிணக்கத்திற்கான பேரணியை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். டெல்லியில் ஜனவரி 22 ஆம் தேதியில் ஆம் ஆத்மி அரசு ராம்லீலா நிகழ்ச்சியை நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.

உணவளிக்க அன்னதான கூடங்கள்!

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வயிறார உணவளிக்க தன்னார்வலர்களால் அன்னதான கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதான கூடங்களுக்கு நிலம் அளித்து அயோத்தி அரசு உதவியுள்ளது. புத்தம்புதிய காய்கறிகளுடன் சுகாதாரமாக சுவையாக உணவுகள் தயாராகி வருகிறது.

அடுத்த சில மாதங்களுக்கு இந்த அன்னதான கூடங்கள் செயல்பட உள்ளன. இந்த அன்னதான கூடங்கள் மூலம் தினசரி 20,000 பேருக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com