அருணாச்சல்: தேர்தலுக்கு முன்பே வாகைசூடும் பாஜக.. முதல்வர் உள்பட 5 பாஜகவினர் போட்டியின்றித் தேர்வு!

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட 5 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பெமா காண்டு
பெமா காண்டுட்விட்டர்

அருணாச்சலில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் வேகம்பிடித்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நடப்பு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அம்மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

பெமா காண்டு
பெமா காண்டு

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 30க்குப் பிறகு அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

இதையும் படிக்க: ED அனுப்பிய சம்மனை நிராகரித்த மஹுவா மொய்தரா.. ‘என்ன நடக்கும் தெரியுமா?’.. மிரட்டும் பாஜக!

பெமா காண்டு
இந்தியாவின் அருணாச்சல் எல்லையில் கிராமத்தையே உருவாக்கியுள்ள சீனா: அதிர்ச்சி படங்கள்

போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட 5 பாஜக வேட்பாளர்கள்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 41 இடங்களை வென்ற பாஜக, ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக பிமா காண்டு உள்ளார். இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பாஜக சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்தது. இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தத்தில், 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு மொத்தம் 197 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் தொகுதியான முக்டோவைத் தவிர, மேலும் நான்கு பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதேபோல் சாகலி தொகுதியில் தேச்சி ரட்டு, டாலி தொகுதியில் ஜிக்கே டாகோ, தாலிஹா தொகுதியில் நியாடோ டுகோம், ரோயிங் தொகுதியில் முச்சு மிட்டி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் தேச்சி ராது மட்டும் புதுமுகம். மற்ற மூன்று பேரும் அந்தந்த தொகுதிகளின் தற்போதைய எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் பெமா காண்டு, “வேட்புமனு தாக்கல் நிறைவில் 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல் ஆகியுள்ளது. இதனால் நாங்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளோம். மார்ச் 30ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அதற்குள் இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறும் பட்சத்தில், போட்டியின்றி தேர்வாகும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

பெமா காண்டு
Asian Games 2023: அருணாச்சல் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுத்ததா சீனா? மத்திய அமைச்சரின் பயணம் ரத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com