’தெலுங்கு தேச கட்சியினரால் மாநிலத்தில் வன்முறை..’ குற்றச்சாட்டை வைத்த ஜெகன் மோகன்!

’தெலுங்கு தேசம் கட்சியினரின் தன்னிச்சையான தாக்குதல்களால் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது” என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு, ஜெகன் மோகன்
சந்திரபாபு, ஜெகன் மோகன்எக்ஸ் தளம்

18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆரம்பித்து ஜூன் 1வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இத்துடன் சிக்கிம், அருணாச்சல், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஜூன் 12ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுகோப்புப் படம்

இந்த நிலையில், ’’தெலுங்கு தேசம் கட்சியினரின் தன்னிச்சையான தாக்குதல்களால் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது” என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

சந்திரபாபு, ஜெகன் மோகன்
ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”ஆந்திர மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சிதைந்துகொண்டிருக்கின்றன. சந்திரபாபு நாயுடுவின் அரசியல் சாதனைகளால் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினரின் தன்னிச்சையான தாக்குதல்களால் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது. முழு நிர்வாகமும் பலவீனமடைந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் ஆவேசத்துடன் தாக்கப்படுகிறார்கள்.

கட்சியில் இருந்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயர்கல்வி மையங்களாக விளங்கும் பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் துஷ்பிரயேகம் செய்யப்பட்டு, பயமுறுத்தப்படுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில், வளர்ச்சி சீர்திருத்தங்கள், ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்களால் பெயர்பெற்ற ஆந்திர மாநில அரசின் நற்பெயரைச் சேதப்படுத்தி, மூன்றே நாட்களில் வன்முறை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சியினர் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸாமீது தாக்குதல்.. பலியாகும் அப்பாவி உயிர்கள்.. போர் குறித்து அமெரிக்காவில் பேசப் போகும் இஸ்ரேல்!

சந்திரபாபு, ஜெகன் மோகன்
எம்.பி-க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை... நிதீஷ் குமார் போட்ட கண்டிஷன்... பாஜகவுக்கு புது சிக்கல்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com