மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்.. அமித் ஷா உறுதி!
மறைந்த மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் யமுனை நதிக்கரையோரத்தில் உள்ள நிகாம்போத் படித்துறையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாட்டின் முதல் சீக்கிய பிரதமரின் உடலை தகனம் செய்வதற்கும், நினைவிடம் அமைப்பதற்கும் கூட இடத்தை ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லையா என காங்கிரஸ் விமர்சித்திருந்தது. மேலும், நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
நினவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்..
இதைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நினைவிடம் அமைக்க நிச்சயம் இடம் ஒதுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதே சமயம் இறுதிச்சடங்குகள் மற்றும் தகன நிகழ்வுகள் குறிப்பிட்டப்படி நடக்கும் என்றும், ஏனெனில் அறக்கட்டளை குழுவை அமைத்த பிறகே இடம் ஒதுக்க முடியும் என்றும் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது என்றும் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.