Air India Cuts 100 Flights a Day Amid Soaring Fuel Costs
Air India Pt web

எரிபொருள் விலை உயர்வு.. நெருக்கடியில் ஏர் இந்தியா.. தினமும் 100 விமானங்கள் ரத்து!

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டு விமானங்களில் தினமும் 100 விமானங்களக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
Published on

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் இருப்பதால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான எரிபொருள் விலை அதிகமாகி இருப்பதால் விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

Aviation fuel
Aviation fuel web

தற்போது, நாளொன்றுக்கு சுமார் 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா, ஜூன் மாதத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய சர்வதேச இடங்களுக்கான வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 விமான சேவைகளைக் குறைக்க திட்டமிட்டு உள்ளது. தினமும் சுமார் 1,100 விமானங்களை இயக்கி வரும் இந்நிறுவனம், ஜூன் மாதத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு இயக்கத் திட்டமிட்டுள்ள சேவைகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.

Air India Cuts 100 Flights a Day Amid Soaring Fuel Costs
இது தேவையா..? ஜம்மு காஷ்மீரை PAK. பகுதிக்குள் இணைத்த நேபாள ஏர்லைன்ஸ்.. நடந்தது என்ன?

ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளாவிய சராசரி விமான எரிபொருள் விலை ஒரு பீப்பாய்க்கு $179.46 ஆக இருந்தது. இது பிப்ரவரி மாத இறுதியில் இருந்த $99.40 விலையை விட 80% அதிகமாகும். இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் ஏர் இந்தியா விமான சேவைகளைக் குறைக்க திட்டமிட்டு உள்ளது.

avaiation fuel
avaiation fuel web

ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச விமானப் பயணங்களில் உணவை ஒரு விருப்பத் தேர்வாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ​​உணவைத் தேர்வு செய்யாத பயணிகளின் விமானக் கட்டணத்திலிருந்து 250 ரூபாய்க்கும் அதிகமான தொகை குறைக்கப்படக்கூடும்.

மே 1 முதல் தொடங்கும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு டீசல் மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), செவ்வாயன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு (MoCA) கடிதம் எழுதியுள்ளது. அதில், விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை நிர்ணயம் குறித்து அவசரகால அரசு தலையீட்டைக் கோரியுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தத் துறை "கடுமையான அழுத்தத்தில்" உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

Air India Cuts 100 Flights a Day Amid Soaring Fuel Costs
ஈரான் போர் | அமெரிக்கா உண்மையில் செலவிட்டது எவ்வளவு?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com