nepal airlines jammu kashmir pakistan map controversy
Nepal airlinesx page

PAK. பகுதிக்குள் ஜம்மு - காஷ்மீர்.. வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கிய நேபாள ஏர்லைன்ஸ்!

விமான நிறுவனத்தைக் கடுமையாகச் சாடிய பல இந்தியப் பயனர்களில், போஜ்புரி நடிகரும் பாடகருமான கேசரிலால் யாதவும் ஒருவர்.
Published on

அரசுக்குச் சொந்தமான நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது நெட்வொர்க் வரைபடத்தில் முழு ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டியிருந்தது. நேபாள ஏர்லைன்ஸ், இந்தியாவில் தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள வேளையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது, கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

எல்லா நாடுகளிலும் எல்லைத் தகராறு இருந்து வருகிறது. அது, இந்தியா - பாகிஸ்தான் - சீனா எல்லைகளிலும் தொடர்கிறது. இந்தச் சூழலில், அரசுக்குச் சொந்தமான நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது நெட்வொர்க் வரைபடத்தில் முழு ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டியிருந்தது.

அதாவது, அந்த விமான நிறுவனம் வெளியிடப்பட்டிருந்த சமூக ஊடகப் பதிவில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டும் வழித்தட வரைபடத்தைப் பகிர்ந்திருந்தது. நேபாள ஏர்லைன்ஸ், இந்தியாவில் தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள வேளையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது, கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. குறிப்பாக, இதுதொடர்பாக #BoycottNepalAirlines என்ற ஹேஷ்டேக் வைரலானது.

nepal airlines jammu kashmir pakistan map controversy
பதவியேற்று ஒரு மாசம்கூட ஆகலை.. நேபாள பிரதமருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. 3 முக்கிய காரணம்!

தொடர்ந்து, பயனர்கள் நேபாள அரசுக்கு எதிராகப் பதிவுகளையும் பதிவு செய்தனர். விமான நிறுவனத்தைக் கடுமையாகச் சாடிய பல இந்தியப் பயனர்களில், போஜ்புரி நடிகரும் பாடகருமான கேசரிலால் யாதவும் ஒருவர். அவர், "இது ஒரு சாதாரண விஷயமல்ல; இது ஒரு திட்டமிட்ட செயல் போல் தெரிகிறது. இது போன்ற செயல்களை ஆத்திரமூட்டுதல் என்று சொல்வார்கள்" என ட்வீட் செய்திருந்தார்.

தொடர்ந்து, இப்படி எதிர்ப்புகள் நேபாள அரசுக்கு எதிராக வைரலானதைத் தொடர்ந்து, நேபாள ஏர்லைன்ஸ் அந்தப் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரியது. இதுதொடர்பாக அது, "வலைப்பின்னல் வரைபடத்தில் ஏற்பட்ட பிழைக்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். அந்த வரைபடத்தில் சர்வதேச எல்லைகள் தொடர்பான குறிப்பிடத்தக்க வரைபடவியல் பிழைகள் இருந்தன" என்று அது குறிப்பிட்டது. மேலும், இதுகுறித்து ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

nepal airlines jammu kashmir pakistan map controversy
நேபாளம் | புதிய பிரதமர் பதவியேற்ற ஒரே நாளில் அதிரடி.. கே.பி. சர்மா ஒலி கைது!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com