Adani Tops Asia Rich List Surpasses Ambani
அம்பானி, அதானிX

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்.. அம்பானியை முந்திய அதானி!

அதானி மற்றும் அம்பானி இருவருக்கும் இடையே 1.8 பில்லியன் டாலர் என்ற சிறிய வித்தியாசமே இருந்தாலும் தற்போதைய நிலவரம்படி அதானியே அம்பானியை முந்தியுள்ளார்.
Published on

Bloomberg Billionaires Index-ன் சமீபத்திய தரவுகளின்படி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 17ம் தேதி நிலவரப்படி, அதானியின் நிகரச் சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டாலராகவும், அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலராகவும் கணிக்கபட்டுள்ளது.

கடந்த சில காலமாகவே அம்பானி மற்றும் அதானி இருவரும் தரவரிசையில் மிக நெருக்கமாக இருந்து வந்தனர். இருவரின் தனித்தனி வணிகங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இருவரின் இடங்களும் மாறி வந்தது குறிப்பிடத்தக்கது. அதானி மற்றும் அம்பானி இருவருக்கும் இடையே 1.8 பில்லியன் டாலர் என்ற சிறிய வித்தியாசமே இருந்தாலும் தற்போதைய நிலவரம்படி அதானியே அம்பானியை முந்தியுள்ளார்.

Adani Tops Asia Rich List Surpasses Ambani
எலான் மஸ்க்எக்ஸ் தளம்

உலக அளவில், இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் தொழில்நுட்பத் துறை தொழில்முனைவோரே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் 656 பில்லியன் டாலர் நிகரச் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து Larry Page 286 பில்லியன் டாலருடனும், Jeff Bezos 269 பில்லியன் டாலருடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். Sergey Brin 266 பில்லியன் டாலருடன் இவர்களுக்கு மிக நெருக்கமாகவே உள்ளார். அதேவேளையில் Mark Zuckerberg’s-யின் நிகரச் சொத்து மதிப்பு 239 பில்லியன் டாலராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Adani Tops Asia Rich List Surpasses Ambani
ஆசிய பணக்காரர் பட்டியல்| அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி.. மீண்டும் முதலிடம்.!

அதே போல், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானியும், 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானியும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, 36.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் லக்ஷ்மி மிட்டல் மூன்றாம் இடத்திலும், 33.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஷிவ் நாடார் நான்காம் இடத்திலும் உள்ளார்கள்.

Adani Tops Asia Rich List Surpasses Ambani
அம்பானி, அதானிX

சந்தை நிலவரங்கள் மற்றும் சொத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் இப்பட்டியல்கள் தினமும் புதுப்பிக்கப்படுகின்றன என்பதையும், இதில் இடங்கள் மிக விரைவாக மாறக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போதைய நிலையில்படி முகேஷ் அம்பானியை சற்று முந்தி ஆசியாவிலேயே முதலிடத்தைப் கௌதம் அதானி பிடித்துள்ளார் என்பதே கவனிக்க கூடடிய ஒன்று

Adani Tops Asia Rich List Surpasses Ambani
முதல்முறையாக அனில் அம்பானி மகன் மீது கிரிமினல் வழக்கு.. அதிரடியில் இறங்கிய சிபிஐ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com