Gautam Adani Back as India’s Richest Amid Market Turmoil
அம்பானி, அதானிX

ஆசிய பணக்காரர் பட்டியல்| அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி.. மீண்டும் முதலிடம்.!

உலகளாவிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி மீண்டும் இந்தியாவின் முதற்பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
Published on

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி ஆசியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு $92.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 19-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Gautam Adani Back as India’s Richest Amid Market Turmoil
கௌதம் அதானிx

நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் உயர்வால் இவரது சொத்து மதிப்பு சுமார் $3.56 பில்லியன் அதிகரித்தது. தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் மட்டும், அதானி டோட்டல் கேஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் போன்ற பங்குகள் 3% வரை உயர்வு கண்டிருக்கின்றன. கடந்த வருடம் அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்த வருடம் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.

Gautam Adani Back as India’s Richest Amid Market Turmoil
இனி No Problem.. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்த ஈரான்.. கடும் சரிவைச் சந்தித்த எண்ணெய் விலை!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி $90.8 பில்லியன் சொத்து மதிப்புடன், ஆசிய அளவில் 2-வது இடத்திற்கும், உலகளவில் 20-வது இடத்திற்கும் சரிந்துள்ளார். அதேசமயம், உலகப்பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் $656 பில்லியனுடன் முதலிடத்திலும், $286 பில்லியனுடன் லேரி பேஜ் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில், லட்சுமி மிட்டல் $36.9 பில்லியன் (62-வது இடம்), ஷிவ் நாடார் $33.5 பில்லியன் (70-வது இடம்), சாபூர் மிஸ்திரி $33.2 பில்லியன் (71-வது இடம்), சாவித்ரி ஜிண்டால் $32.7 பில்லியன் (73-வது இடம்) ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, 2026-ல் புவிசார் அரசியல் பதற்றங்களால் பலரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. குறிப்பாக LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் அதிகபட்சமாக $44 பில்லியனை இழந்துள்ளார். பில் கேட்ஸ், வாரன் பபெட் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்துக்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Gautam Adani Back as India’s Richest Amid Market Turmoil
Delimitation bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. 278 பேர் மட்டுமே ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com