புதிய இலக்கு! Gpay, PhonePe-க்கு போட்டியாக அதானி குழுமத்தின் அடுத்த டார்கெட்!

அதானி குழுமம் தற்போது ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறைகளில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி
அதானிட்விட்டர்

இந்தியாவில், இன்று பல இடங்களிலும் டிஜிட்டல் கட்டண முறைமையான UPI செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சேவையில் தற்போது gpay, phonepe போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பல துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி குழுமம் UPI சேவையில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுதொடர்பாக அதானி குழுமம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை. அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளுக்கு உள்கட்டமைப்பில் 84 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இணைய வழியிலான ஷாப்பிங் தளத்தையும் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ம.பி | பாலியல் புகாரை திரும்பப் பெற மறுப்பு.. பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஒரே குடும்பத்தில் மூவர் கொலை?

அதானி
அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல்| ’விரைவாக விசாரணை தேவை’.. SC நீதிபதிக்கு 21 அமைப்புகள் கடிதம்!

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பிலிருந்து முழு ஒப்புதல் கிடைத்தவுடன் அதானி குழுமத்தின் ’அதானி-ஒன்’ செயலி மூலம் ஷாப்பிங் சேவைகளை வழங்க உள்ளது. மேலும், பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, அதானி பெயரில் கோ பிரான்டெட் கிரெடிட் கார்டை வெளியிட அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது.

2022ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட அதானி-ஒன் ஆப், தற்போது ஹோட்டல் முன்பதிவு, விமான டிக்கெட் முன்பதிவு போன்ற பயணச் சேவைகளை வழங்கி வருகிறது. இதன் நீட்சியாக யூபிஐ, கிரெடிட் கார்டு, ONDC சேவைகள் ஆகியவை இருக்கும். அதானி விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகள், மின்சாரம் மற்றும் எரிவாயு சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் என பலதரப்பு வாடிக்கையாளர்கள் இதில் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. இதுவரை அந்த செயலியில் டவுன்லோடு செய்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகம் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

அதானி
2 லட்சம் கோடி! - குஜராத்தில் புதிய பாய்ச்சலில் முதலீடு செய்யும் கௌதம் அதானி! எந்த துறையில் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com