நடிகை கங்கனா ரனாவத் குறித்து காங்கிரஸ் நிர்வாகி விமர்சனம் - விசாரணைக்கு உத்தரவு

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத்தை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஷிரினேட் விமர்சித்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்pt desk

நடிகை மற்றும் இமாச்சல் பாஜக மக்களவை வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக வலைதளத்தில் காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா தெரிவித்திருந்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து அப்பதிவை நீக்கிய சுப்ரியா, தனது கணக்குகளை அணுகக்கூடிய வேறு யாரோ ஒருவரால் அவை பதிவேற்றம் செய்யப்பட்டதாக விளக்கமளித்தார்.

kangana ranaut
kangana ranautpt desk

இந்நிலையில் ஒரு பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்ததற்காக சுப்ரியா மீது விசாரணை மற்றும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி ஆளுநருக்கு பாஜக தலைவர் பன்சுரி ஸ்வராஜ் புகார் கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில் அவர்தரப்பிலிருந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கங்கனா ரனாவத்
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோராவிடம் விரிவான விசாரணை அறிக்கையை கோரியுள்ளார் துணைநிலை ஆளுநர் சக்சேனா. சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவின் பின்னணியில் இருந்தவர்கள் யார், யாருடைய மொபைல் போன் இதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com