மம்தாவை தொடர்ந்து ஆம் ஆத்மியும் முடிவு; பஞ்சாப்பில் கூட்டணி இல்லை என பகவந்த் மான் அறிவிப்பு

பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவருமான பகவந்த் மான், மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார்.
பகவந்த் மான்
பகவந்த் மான்pt web

பாஜகவிற்கு எதிராக இந்தியா முழுவதும் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தற்போது நடத்தப்படுகின்றன. ஆனாலும் சில மாநிலங்களில் ஆரம்பம் முதலே தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் காங்கிரஸ் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூகமான சூழல் நிலவவில்லை.

இந்நிலையில் இன்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்திருந்தார். தொகுதிபங்கீடு தொடர்பான என் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “திரிணாமூல் காங்கிரஸ் INDIA கூட்டணியின் தூண். மம்தா இல்லாத இந்திய கூட்டணியை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுக்கு வரும். அது அனைவரையும் திருப்திபடுத்தும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான பகவந்த் மான், “2024 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாட்டின் கதாநாயகனாக மாறும். மாநிலத்தில் ஆம் ஆத்மி 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். ஒரு தொகுதிக்கு மூன்று முதல் நான்கு வேட்பாளர்கள் உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளின் மாநில கட்சிகளும் மாநிலத்தில் கூட்டணியை எதிர்க்கும் சூழலில், இரு கட்சிகளின் தேசிய தலைமையும் கூட்டணியை வலியுறுத்துகின்றன. டெல்லியில் கூட மொத்தமுள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிட, இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பல்வேறு காரணங்கள் காரணமாக பஞ்சாப்பில் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் கூட, இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது மாநிலத்தில் பாஜகவிற்கான கதவினைத் திறந்துவிடும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

தேர்தலில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதற்கான முன்மொழிவை கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக இண்டியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com