என்னது வாரத்துக்கு 70 மணி நேரமா..! உலக அளவில் சராசரி வேலைநேரம் எவ்வளவு? - மனித வரலாறு சொல்வதென்ன?

mospi.gov வெளியிட்ட ஆய்வறிக்கையில் (Periodic Labour Force Surver) இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 40-50 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
model image
model imagefreepik

15 மணி நேரத்துக்கும் மேலாக உழைத்த தொழிலாளர்கள்

எந்தவொரு மனிதனின் வாழ்வியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பது நல்ல வேலை மட்டுமே. அப்படியான வேலை மட்டும அவனுக்கு இல்லையெனில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதேநேரத்தில் அந்த வேலையை அவர் விரும்பிச் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளும் பாதிப்புகளும் அதிகம். 1800களில் ஒரு மனிதன் 15 மணி நேரத்துக்கும் மேலாக உழைத்தான். வேலைக்காக, தொழிலாளர்கள் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்த கதைகளும் உண்டு. அதற்குப் பிறகு பல போராட்டங்கள் உலகளவில் வெடித்த நிலையில், ஒரு மனிதனின் வேலை நேரம் 12 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டு, அது காலம் மாற்றத்தில் தற்போது 8 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

model image
model imagefreepik

இந்த 8 மணி நேரத்தைக் கணக்கில் கொண்டு வாரத்துக்கு 5 - 6 நாட்கள் பணி செய்தால்கூட, ஒரு நபர் 40- 48 மணி நேரம் உழைக்கிறார். ஆக, இதுவே ஒரு தொழிலாளரின் சராசரி வேலை நேரமாக இருக்கிறது. இந்த 8 மணி நேர வேலையின்போதே, பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியிருக்கையில் இதை உயர்த்தினால் அதனால் பாதிப்புகள்தான் அதிகரிக்கும் என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து ஓர் அலசல் கட்டுரையை இங்கே காண்போம்.

இதையும் படிக்க: தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த அட்வைஸ்!

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் வேலை நேரம் குறித்த பேச்சு!

பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை, ஊழல்களை குறைக்காத வரை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. எனவே அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

நாராயணமூர்த்தி
நாராயணமூர்த்தி

நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு, பல நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஊழியர்கள் தரப்பில் இருந்து மனஅழுத்தம், இதய பிரச்னைகள், உடல்நலக் கோளாறு, குடும்பச் சூழல் ஆகிய பாதிப்புகள் வரும் என மருத்துவர்களும் தொழிலாளர் நல அமைப்பினரும் இதை முற்றிலும் எதிர்த்தனர். மேலும், இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

model image
“பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளிகளை நாராயண மூர்த்தி காவு வாங்க வேண்டாம்” - சிபிஎம் செல்வா
mospi.gov

ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும் தொழிலாளர்களின் நேரம்

ஆனால், mospi.gov வெளியிட்ட ஆய்வறிக்கையில் (Periodic Labour Force Surver) இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 40-50 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் கிராமப்புறங்களில் சுயதொழிலில் ஈடுபடும் ஆண்கள் வாரத்திற்கு 44.2 மணி நேரம் மட்டும் உழைப்பதாகவும், பெண்கள் 30.1 மணி நேரம் உழைப்பதாகவும், தனிநபர் ஒருவர் 38.9 மணி நேரம் உழைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தொடர்ந்து வேலையில் இருப்போர் அல்லது ஊதியம் வாங்குவோர் வாரத்திற்கு 51.2 மணி நேரம் (ஆண்கள்) உழைப்பதாகவும், பெண்கள் 42.1 மணி நேரம் உழைப்பதாகவும், தனிநபர் 49.1 மணி நேரம் உழைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாதாரண தொழிலாளர்களில் ஆண்களைப் பொறுத்தவரை 41.9 மணி நேரமும், பெண்கள் 34.6 மணி நேரமும், தனிநபர் 40.0 மணி நேரமும் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரில் ஆண்கள் 44.7 மணி நேரமும், பெண்கள் 32.2 மணி நேரமும், தனிநபர் 40.6 மணிநேரமும் உழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அன்று உணவு டெலிவரி பாய்.. இன்று உலகக்கோப்பையில் ஆட்டநாயகன்! ரசிகர்கள் வியக்கும் நெதர்லாந்து வீரர்!

நகரத்தில் உழைக்கும் தொழிலாளர்களின் நேரம்

இதுவே நகரத்தில் சுயத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் 52.3 மணி நேரமும், பெண்கள் 35.4 மணி நேரமும், தனி நபர் 48.5 மணி நேரமும் வேலையில் பணிபுரிவதாக அந்த ஆய்வறைக்கை தெரிவிக்கிறது. மேலும், தொடர்ந்து வேலையில் இருப்போர் அல்லது ஊதியம் வாங்குவோரில் ஆண்கள் 51.0 மணி நேரமும், பெண்கள் 43.4 மணி நேரமும், தனிநபர் 49.1 மணி நேரமும் உழைப்பதாகத் தெரிகிறது. அதுபோல் சாதாரணத் தொழிலாளர்களில் ஆண்கள் 41.4 மணி நேரமும், பெண்கள் 34.2 மணி நேரமும், தனி நபர் 40.4 மணி நேரமும் உழைப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரில் ஆண்கள் 50.3 மணி நேரமும், பெண்கள் 39.6 மணி நேரமும், தனிநபர் 47.9 மணி நேரமும் உழைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நகரம் மற்றும் கிராமங்களில் உழைக்கும் தொழிலாளர்களின் நேரம்

இதே ஆய்வறிக்கையில் நகரம் மற்றும் கிராமத்தில் சுயதொழிலில் ஈடுபடும் ஆண்களின் பணி நேரம் 45.9 மணியாகவும், பெண்கள் 30.7 மணி நேரமாகவும், தனிநபர் 40.6 மணி நேரமாகவும் உழைக்கின்றனர். தொடர்ந்து வேலையில் இருப்போர் அல்லது ஊதியம் வாங்குவோரில் ஆண்கள் 51.1 மணி நேரமும், பெண்கள் 42.8 மணி நேரமும், தனி நபர் 49.1 மணி நேரமும் உழைப்பதாகவும், சாதாரணத் தொழிலாளர்களில் ஆண்கள் 41.9 மணி நேரமும், பெண்கள் 34.6 மணி நேரமும், தனிநபர் 40.0 மணிநேரமும், மொத்தமாக இவர்களில் ஆண்கள் மட்டும் 46.3 மணி நேரமும், பெண்கள் 33.6 மணி நேரமும், தனிநபர் 42.5 மணி நேரமும் உழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த ஆண்டைவிடக் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

ஆண்டுக்கு மிக அதிக மணி நேரம் உழைக்கும் நாடுகள்

இன்னொரு அறிக்கையில், லிபிரியா(2,454), மவுரிடேனியா(2,470), இந்தியா(2,480), கத்தார்(2,496), காம்பியா(2,600), பூட்டான்(2,636), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2,704) ஆகிய நாடுகளில் வருடத்துக்கு 2,450க்கும் மேற்பட்ட மணி நேரம் உழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மிகக் குறைந்த மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் பட்டியலில் உருகுவே (1,284) முதல் இடத்தில் உள்ளது. அடுத்து ரவண்டா (1,456), ஆஸ்திரியா (1,534) ஆகிய நாடுகள் உள்ளன.

சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி

’என் கணவர் வாரத்திற்கு 80 - 90 மணிநேரம் வேலை பார்க்கக் கூடியவர்’ - சுதா மூர்த்தி

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதாவிடம், 70 மணிநேரம் பணி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’எனது கணவர் ஆர்வம் மற்றும் உண்மையான கடின உழைப்பு ஆகியவற்றின் மீது அதிகம் நம்பிக்கை உடையவர். அவர், வாரத்திற்கு 80 - 90 மணிநேரம் வேலை பார்க்கக் கூடியவர். அதற்குக் குறைவாக அவர் பணியாற்றியதே கிடையாது. அவர் எப்போதும் கடுமையான உழைப்பை நம்புபவர் மற்றும் அப்படியே வாழ்ந்தவர். அவருக்கு தோன்றியதைத்தான் அவர் பேசினார்' என சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

யார் என்ன சொன்னாலும், ஒருநாளைக்கு ஒரு மனிதர் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார் என்பதைக் கணக்கில் கொள்வதைவிட, அவர் எவ்வளவு திறமையாக வேலை செய்கிறார் என்பதைக் கவனத்தில் கொண்டால் நிறுவனமும் நல்ல வளர்ச்சி பெறும்; தொழிலாளர்களும் மேன்மையடைவர்.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com