"மீண்டும் காதலிக்கலா வா" முன்னாள் காதலனை அழைத்து கஞ்சா வழக்கில் சிக்கவைத்த காவல் அதிகாரியின் மகள்!

தெலுங்கானாவில் முன்னாள் காதலனை வரவழைத்து கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சட்டக் கல்லூரி மாணவி ரிங்கி
சட்டக் கல்லூரி மாணவி ரிங்கிpt wep

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருபவர் ரிங்கி. அதே கல்லூரியைச் சேர்ந்தவர் ஷ்ரவன். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் பிரிந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து முன்னாள் காதலனைப் பழி வாங்க நினைத்த ரிங்கி, ஷ்ரவனுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவருடைய முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

ரிங்கி
ரிங்கி

இந்தநிலையில், ரிங்கி தனது முன்னாள் காதலன் ஷ்ரவனை தொடர்பு கொண்டு, "உன்னிடம் பேச வேண்டும் வா" என்று ஹைதராபாத்தில் உள்ள பார்க்கிற்கு அழைத்துள்ளார். இதனால் ஆர்வமடைந்த ஷ்ரவன் காரை எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு சென்றுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவி ரிங்கி
"எரித்து விடுவேன் என மிரட்டுகிறார்" - அதிமுக எம்.எல்.ஏ மீது கவுன்சிலர் புகார் - நடந்தது என்ன?

பின்னர் இருவரும் சந்தித்து தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரிங்கியின் நண்பர்கள் 5 பேர், ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அவர்களே, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் சோதனை செய்து அதிலிருந்த கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ஷ்ரவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

அப்போது ரிங்கிக்கும் தனக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் மற்றும் அவர்கள் பிரிந்து சென்ற காரணம், ரிங்கியின் செல்போன் அழைப்பு உள்ளிட்டவை குறித்து ஷ்ரவன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவி ரிங்கி
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டர்.. முழு விவரம்

இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், ராங்கியைக் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காதலனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஷ்ரவன் காரில் கஞ்சா பொட்டலம் வைத்ததை ரிங்கி ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரிங்கி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

கைது செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தெலங்கானா மாநில போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் எனத் தெரியவந்துள்ளது.

காதலனைப் பழி வாங்க நினைத்து நண்பர்களுடன் சேர்ந்து சட்டக் கல்லூரி மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com