"எரித்து விடுவேன் என மிரட்டுகிறார்" - அதிமுக எம்.எல்.ஏ மீது கவுன்சிலர் புகார் - நடந்தது என்ன?

ஶ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக கவுன்சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கவுன்சிலர் கணேசன்
கவுன்சிலர் கணேசன் pt web

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மான்ராஜ். இவரது மனைவி வசந்தி மான்ராஜ். இவர் மாவட்ட சேர்மனாக பதவி வகித்து வருகிறார். இந்தப் பகுதிக்கு உட்பட்ட 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் கணேசன். இவர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்த கவுன்சிலர் கணேசன்
காவல்நிலையத்தில் புகார் அளித்த கவுன்சிலர் கணேசன்

அந்த புகார் மனுவில், "தன்னுடைய வார்டுக்கான நலத்திட்டங்களை செய்வதற்காக மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் வைத்து சேர்மன் வசந்தி மான்ராஜிடம் நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டதாகவும், வசந்தி மான்ராஜ் இதற்கு மறுப்பு தெரிவித்து, அவரது கணவர் எம்.எல்.ஏ மான்ராஜ் கட்சி நிகழ்ச்சிகளில் வைத்து தனக்குப் பல முறை மிரட்டல் விடுத்துள்ளார்.

கவுன்சிலர் கணேசன்
2 வருடங்களில் கசந்த காதல் வாழ்க்கை.. ஒரு வயது குழந்தையை தவிக்கவிட்ட பெண் விபரீத முடிவு!

இந்த நிலையில் நேற்று மதியம் செல்போனில் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ மான்ராஜ், தன்னுடைய சகோதரரை மிரட்டித் தான் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவதாகவும், ஏற்கெனவே இருவரை காரில் வைத்து எரித்து கொலை செய்தது போன்று தன்னையும் எரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் உரியப் பாதுகாப்பு அளித்து கொலை மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ மான்ராஜ்
ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ மான்ராஜ்

மேலும் இது குறித்து செல்போன் குரல் பதிவையும் கணேசன் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மீது அசிங்கமாகப் பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக எம்எல்ஏ மீது அதிமுக கவுன்சிலர் புகார் அளித்த சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com