\
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்file photo

குற்றப்பின்னணி உடையவர்கள் அமைச்சராக முடியாதா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சராக்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்ற பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது.
Published on: 
Summary

அமைச்சர்களை நியமிப்பது மாநில முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம் எனவும், அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகள் புனைய வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

குற்றப் பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்கத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் புகைப்படம்

கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அமைச்சர்களை நியமிப்பது மற்றும் துறைகளை ஒதுக்குவது மாநில முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்தனர்.

மேலும், இதன்மூலம் அரசியல் எதிரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைய வாய்ப்பிருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

உச்சநீதிமன்றம்
500 கி.மீ. இலக்கும் துவம்சம்.. எதிரிகள் படை இனி நடுங்கும்.. கர்ஜிக்க காத்திருக்கும் பிரளய்!
உச்சநீதிமன்றம்
டேட்டா தீர்ந்துடுச்சா? ₹15 போதும்! அன்லிமிடெட் டேட்டா? ஜியோ-வின் TRUE அன்லிமிடெட் 5G!