டேட்டா தீர்ந்துடுச்சா? ₹15 போதும்! அன்லிமிடெட் டேட்டா? ஜியோ-வின் TRUE அன்லிமிடெட் 5G!
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 15 ரூபாய்க்கு உண்மையான அன்லிமிடெட் 5G டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்திற்கு அதிவேக இணையத்தை வழங்கும் இந்த பேக், அதிக டேட்டா தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக இது சிறந்த தேர்வாகும்.
செய்தியாளர் - M.மீரா
ரிலை்ஸ் ஜியோ தனது பயனாளர்களுக்கு ப்ரீபெய்ட் "உண்மையான அன்லிமிடெட் 5G" என்ற டேட்டா திட்டத்தை வெறும் 15 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், அதிவேக இணையம் மற்றும் அதிகமான பதிவிறக்கம் செய்ய பயனர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
இதில் குறிப்பிட்ட அளவு டேட்டா மட்டும் தராமல், வரம்பற்ற 5G இணையத்தை ஜியோ வழங்குகிறது. கவலையின்றி 24 மணி நேரத்திற்கு இணையத்தில் இணைந்திருக்கலாம். பொதுவாக கூடுதல் ஆட்-ஆன் பேக்குகளில் (ADD-ON) ஒன்று அல்லது இரண்டு ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த 15 ரூபாய் திட்டத்தில் டேட்டா வரம்பே இல்லை. ரீசார்ஜ் செய்ததிலிருந்து சரியாக 24 மணி நேரத்துக்கு, வேகம் குறைக்கப்படாத அதிவேக 5G இணையம் கிடைக்கும்.
இது ஒரு கூடுதல் பூஸ்டர் பேக் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ஜியோ எண்ணில் ஏற்கனவே ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் செயலில் இருக்க வேண்டும். மேலும், 5G வசதியுள்ள ஸ்மார்ட்போனும், ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதியும் தேவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திடீரென அதிக டேட்டா தேவைப்படும் சந்ததர்களுக்கு ஜியோவின் இந்த பேக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்கள் அல்லது நேரடி விளையாட்டுப் போட்டிகளை அல்ட்ரா HD மற்றும் 4K தரத்தில் பார்க்க விரும்புவார்கள், இதில் தடையில்லாமல் கண்டுகளிக்கலாம். பொழுபோக்குகளை தாண்டி, இது மாணவர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்வது, வீடியோ conference, அசைன்மெண்ட்களை முடிக்கவும் மலிவான விலையில் உதவிகரமாக இருக்கும்.
மொபைல் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்து லேப்டாப் அல்லது டேப்லெட்டை இணைத்து உங்களின் வேலைகளை செய்யலாம். பெரிய software-களை பதிவிறக்கம் செய்யவும், OS அப்டேட் செய்யவும், பெரிய கேம்களை டவுன்லோட் செய்யவும், உயர்தர வீடியோக்கள் மற்றும் அலுவலக ஃபைல்களை கிளவுடில் பேக்கப் எடுக்கவும் இந்த பேக் கைகொடுக்கும்.
MyJio ஆப், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், எண்டர்பிரைஸ் ஜியோ தளங்கள், அல்லது கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்கள் மூலம் ஆன்லைனில் நேரடியாக வாங்கலாம்.அல்லது உங்கள் அருகிலுள்ள மொபைல் ரீசார்ஜ் கடைகளிலும் இந்த 15 ரூபாய் பேக்கை வாங்கலாம்.

