இந்தியா
பள்ளி வேன் மீது பஸ் மோதல்: 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
பள்ளி வேன் மீது பஸ் மோதல்: 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிவந்த வேன், பயணிகள் பேருந்து மீது மோதியதில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ளது பிர்சிங்பூர். இங்குள்ள, லக்கி கான்வென்டில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த பயணிகள் பேருந்து மீது எதிர்பாராத விதமாக, பள்ளி வேன் மோதியது.
இதில் பள்ளி வேனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் 7 குழந்தைகள் உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.