[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அம்மா, பாட்டியின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம் 

pilot-flies-mother-grandmother-on-their-maiden-flight

நீண்ட நாள் சபதத்திற்கு பிறகு அம்மா பாட்டியுடன் விமானி ஒருவர் விமானத்தில் பறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்யுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். 2007 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தற்போது வரை 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது அம்மா, பாட்டி, தங்கையுடன் தான் ஓட்டும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தை இயக்குவதற்கு முன்பு தனது அம்மா மற்றும் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சென்றார். 

இவரின் இத்தகைய செயலை அருகில் இருந்தவர்கள் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்க்கும் வலைதளவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவை பிரதீப் கிருஷ்ணன் நண்பன் நாகர்ஜூன் திவாரகநாத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு கனவு நினைவானது என கூறியுள்ளார். மேலும் தனது ரூம்மேட் பிரதீப் கிருஷ்ணன் இண்டிகோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தனது அம்மா, பாட்டி, சகோதரியுடன் முதன் முதலில் பயணம் செய்கிறார் என குறிப்பிட்டிருந்தார். 

இதனிடையே பிரதீப் கிருஷ்ணன் இல்லாமல் விமானத்தில் பயணிக்க மாட்டோம் என அவரது அம்மாவும் பாட்டியும் சபதம் ஏற்றிருந்ததனர். சென்னை டூ சிங்கப்பூர் சென்ற இண்டிகோவின் முதல் விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close