கேரளா: பெட்ரோல் பங்க் ஊழியர் கண்களில் மிளகாய் பொடி போட்டு நள்ளிரவில் நடந்த கைவரிசை! திக் திக் வீடியோ

3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் பங்க் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
petrol bunk
petrol bunkfile image

கேரளா மாநிலம் கோழிக்கோடு ஓமச்சேரியில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு பெட்ரோல் பங்கிற்கு வந்த 4 வாலிபர்கள், பங்க் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு, துணியால் தலையை மூடிக்கொண்டு பணத்தை திருடியுள்ளனர். ஊழியரை தாக்கியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. உடன் இருந்த ஊழியர் ஒன்றுமே தெரியாதபடி, கூலாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.

petrol bunk
பைக் வீலிங் செய்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை!

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் கூறுகையில் “ஒரு காரில் பெட்ரோல் போட 4 பேர் வந்தனர். அதில் மூன்று பேர் வண்டியில் இருந்து இறங்கி 2010 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க கூறி விட்டு கழிப்பறை சென்றனர். பெட்ரோல் போட்ட உடன் கார் ஓட்டியவர் காரை முன் நோக்கி நகர்த்தினார். Gpay மூலம் அனுப்பவுதாக கூறி கழிப்பறை சென்று வந்த 3 பேர், மிளகாய் பொடியை தூவி, அங்லிருந்த மொத்த தொகை, 5310 ரூபாயை எடுத்து சென்றுவிட்டனர்” என்றார்.

சம்பவம் குறித்து பங்க் ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

petrol bunk
அரசு ஏசி பஸ்ஸில் கட்டுக்கட்டாக போலி டிக்கெட்டுகள்.. செக்கிங் இஸ்பெக்டரிடம் வசமாக சிக்கிய ஓட்டுநர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com