அரசு ஏசி பஸ்ஸில் கட்டுக்கட்டாக போலி டிக்கெட்டுகள்.. செக்கிங் இஸ்பெக்டரிடம் வசமாக சிக்கிய ஓட்டுநர்!

சேலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் ஏசி பஸ்ஸில் போலியான டிக்கெட்டை பயன்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் நடந்த அதிரடி சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய போலி டிக்கெட்டுகள்
govt bus
govt busfile image

சேலத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் அரசு ஏசி பேருந்து சிதம்பரம் நோக்கி கிளம்பியது. அப்போது வழக்கத்திற்கு மாறாக நடத்துநர், அனைத்து பேருந்து நிலையத்திலும் டவுன் பஸ் போல நிறுத்தி பயணங்களை ஏற்றி இறக்கிவிட்டு வந்தார். இதனை கவனித்த பயணிகள், இது டவுன் பஸ்ஸா அல்லது ஏசி பஸ்ஸா என ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

பின்பு விருத்தாச்சலத்தை தாண்டி வடலூர் வரும்பொழுது, கொடுக்கப்பட்ட ரகசிய தகவலின் பேரில், அரசு பேருந்து செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் திடீரென்று பஸ்ஸை நிப்பாட்டி டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். அப்போதுபோலி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் டிப்போ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வடலூரில் பஸ்சை கைப்பற்றிய அதிகாரிகள் யாரையும் பஸ்ஸில் ஏற்றாமல், பயணி ஒருவரை மட்டும், நீங்கள் சாட்சியளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு “என் உறவினர் மரணம் அடைந்து விட்டார். அவரை பார்ப்பதற்கு நான் சென்று கொண்டிருக்கிறேன். என்னால் முடியாது” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு அதிகாரிகள் ஒரு பேப்பரில் எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். பஸ்ஸில் இருந்த கண்டக்டர் நேரு கட்டு கட்டுகளாக போலி டிக்கெட்டுகள் வைத்திருந்த நிலையில், அதையும் கைப்பற்றி சிதம்பரம் அரசு போக்குவரத்து கழக டிப்போவுக்கு, பேருந்தை கொண்டு சென்றனர். இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டிக்கெட் பரிசோதனை குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது..

govt bus
World Prematurity Day | குறைப்பிரசவத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com