\
kidney stones
சிறுநீரகக் கல்file photo

சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகின்றன? ஆண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவது ஏன்?

சிறுநீரகக் கற்கள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே மாறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Published on: 
Summary

சிறுநீரக கல் பிரச்னையை மாதவிடாய் பிரச்னை என தவறாக பெண்கள் புரிந்துகொள்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கை. பெண்களை விட ஆண்கள் அதிகம் சிறுநீரக கல் பாதிப்புக்குள்ளாவதாக எச்சரிக்கை!

பொதுவாக போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதீத உப்பு, ஆக்சலேட் நிறைந்த உணவுகளால் சிறுநீரில் திரவத்தின் அளவை விட கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தாது உப்புகளின் செறிவு அதிகரிக்கிறது. பின்னர் அவை படிகங்களாகத் திரண்டு நாளடைவில் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. பெண்களை விட ஆண்களுக்கே சிறுநீரகக் கற்கள் ஏற்படும் ஆபத்து 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

எனினும், பெண்களிடையே உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரிப்பதால் இந்த இடைவெளி குறைந்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுநீரக கல்
சிறுநீரக கல்முகநூல்

குறிப்பாக, பெண்களில், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், புரோஜெஸ்டிரோன் அதிகரிப்பு மற்றும் தொடர் சிறுநீர்ப்பாதை தொற்றுகளால் 'ஸ்ட்ருவைட்' (Struvite) வகை கற்கள் உருவாகின்றன. அதேசமயம் அதிக யூரியா வெளியேற்றம் மற்றும் உணவுப் பழக்கங்கள் காரணமாக கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலக் கற்கள் ஆண்களிடம் அதிகம் காணப்படுகின்றன. இவை, ஆண்களின் கீழ் முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் தோன்றி விரைப்பை வரை பரவி தீவிர வலியை உண்டாக்கும்.

அதேநேரம், பெண்களோ சிறுநீரகக் கல் பாதிப்பை மாதவிடாய் வலி எனத் தவறாகக் கருதி சிகிச்சையைத் தாமதப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீரில் ரத்தம், அதீத வாந்தியுடன் காய்ச்சல் ஏற்படுவது ஆகியவை இதன் தீவிர அறிகுறிகள் ஆகும்.

சிறுநீரக பாதிப்பு
சிறுநீரக பாதிப்பு முகநூல்

எனவே தினமும் குறைந்தது இரண்டரை முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அதிகப்படியான உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், எலுமிச்சை சாறு போன்ற சிட்ரேட் நிறைந்த உணவுளைச் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

kidney stones
மனிதகுலத்துக்கு 17 ஆபத்துகள்.. 189 கோடி வாழ்நாள் இழப்பு? லான்செட் எச்சரிக்கை!
kidney stones
பேரிடர், சுனாமி தேவையில்லை! பிரபஞ்ச விதிகள் மாறினாலே அழிவுதான்.. என்ன ரகசியம் அது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com