\
Super El Nino Brewing Threaten the World
super el nino AI generated image

மனிதகுலத்துக்கு 17 ஆபத்துகள்.. 189 கோடி வாழ்நாள் இழப்பு? லான்செட் எச்சரிக்கை!

ஜெர்மனியின் பெர்லின் (Berlin) நகரில் நடைபெற்றுவரும் 2026 உலக சுகாதார உச்சி மாநாட்டில் 'தி லான்செட் கமிஷன்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த மாபெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது...
Published on: 
Summary

மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு 17 பேரழிவு அச்சுறுத்தல்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. புவி வெப்பமாதலை கட்டுப்படுத்துவதால் 189 கோடி வாழ்நாட்களை காப்பாற்ற முடியும். உரிய நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புவி வெப்பமாதலை 4 புள்ளி 4 டிகிரி செல்சியஸுக்குச் செல்லவிடாமல் 1 புள்ளி 8 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தினால், அதிகப்படியான வெப்பம் மற்றும் காற்று மாசுபாட்டால் இழக்கப்படும் 189 கோடி ஆரோக்கியமான மனித வாழ்நாட்களைக் காப்பாற்ற முடியும் என்று தி லான்செட் கமிஷன் ஆய்வு கூறுகிறது.

2025 முதல் 2100 வரை மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் 17 பேரழிவு அச்சுறுத்தல்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் அணுசக்தி மோதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு ஆகிய இரண்டும் மனித இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்ட அச்சுறுத்தல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உரிய தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அணுசக்தி மோதல்களைத் தவிர்த்தால் 13 புள்ளி 3 கோடி உயிரிழப்புகளையும், 935 கோடி ஆரோக்கியமான வாழ்நாள் இழப்புகளையும் தடுக்க முடியும்.

எல் நினோ
எல் நினோai generated

அதேபோல் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் 1,040 கோடி ஆரோக்கியமான வாழ்நாட்களைப் பாதுகாக்க முடியும். இது தவிர காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பு, குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை, உயர் ரத்த அழுத்தம், மனநலப் பாதிப்புகள், புகைபிடித்தல் போன்றவை பிற முக்கிய அச்சுறுத்தல்களாகும். இந்த ஆபத்துக்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஏழை எளிய மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

செயல்திறன்மிக்க அரசு கொள்கைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் போதுமான நிதி ஒதுக்கீடு மூலம் இந்த 17 அச்சுறுத்தல்களையும் நாம் தடுக்க முடியும். இன்றைய உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளே அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் என்றும், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தின் விலையைக் கூட்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Super El Nino Brewing Threaten the World
இந்தியாவில் குளிர் காலத்திலும் எல் நினோ தாக்கம்? உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - வெளியான அறிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com