\
மனித வாழ்வும் பிரபஞ்ச விதிகளும்
மனித வாழ்வும் பிரபஞ்ச விதிகளும்meta ai

பேரிடர், சுனாமி தேவையில்லை! பிரபஞ்ச விதிகள் மாறினாலே அழிவுதான்.. என்ன ரகசியம் அது?

பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளில் 1 சதவீத மாற்றம் ஏற்பட்டால், தண்ணீர் கெட்டியாக மாறி, மனித ரத்தம் உறையக்கூடும். இதனால் உயிரினங்களின் வாழ்வு முடங்கும் என லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கிறது.
Published on: 

சூரியன், விண்மீன்கள், கிரகங்கள்... ஏன், உயிர்வாழத் தேவையான தண்ணீரே இருந்தாலும்கூட, பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழவே முடியாமல் போகலாம்! இதைக் கேட்க விசித்திரமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளில் வெறும் 1 சதவீத மாற்றம் ஏற்பட்டால்கூட போதும்... நாம் குடிக்கும் தண்ணீர், தேனைப் போலவோ அல்லது தார் போலவோ கெட்டியாக மாறிவிடும். அப்படி மாறினால், மனித செல்லுக்குள் ஊட்டச்சத்துக்கள் நகர முடியாது, கழிவுகளும் வெளியேற முடியாது. உயிரினங்களின் வாழ்வே முடங்கிப்போய்விடும்.

Human Brain May Have Evolved From Two Separate Neural Systems
BrainReuters

ஆச்சரியம் என்னவென்றால், நமது உடலில் ஓடும் ரத்தத்தின் அடர்த்தி, இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு ஏற்பவே மிகத் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கிறது. எலக்ட்ரானின் மின்சுமை அல்லது பிளாங்க் மாறிலியில் சிறிய மாற்றம் நேர்ந்தால், நம் உடலில் ரத்தம் ஓடாமல் உறையும் நிலை கூட வரலாம்.

பிரபஞ்சத்தில் விண்மீன்கள் தோன்றி கார்பன், ஆக்சிஜன் உருவானால் மட்டும் போதாது... திரவங்கள் ஓடுவதற்கு ஏற்ற 'இயற்பியல் சமநிலையும்' இருக்க வேண்டும். நாம் குடிக்கும் ஒரு டம்ளர் தண்ணீரின் ஓட்டத்திலும், ஓடும் ரத்தத்திலும்தான் பிரபஞ்சத்தின் மாபெரும் உயிரின ரகசியமே ஒளிந்திருக்கிறது.

மனித வாழ்வும் பிரபஞ்ச விதிகளும்
மனிதகுலத்துக்கு 17 ஆபத்துகள்.. 189 கோடி வாழ்நாள் இழப்பு? லான்செட் எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com