உடல் எடையை குறைக்கிற ஐடியா இருக்கா... அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!
நாம் ஒவ்வொருவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். அதற்கு முதல் கட்டமாக உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.. அப்படி உடல் எடையை குறைக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கீங்களா? அப்போ நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணாம் இவற்றில் கலோரிகள் அதிகம் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக உள்ளன. அவற்றை தவிர்த்து, நார்ச்சத்துள்ள மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்..
எடை இழப்புக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்
பெரும்பாலும் கலோரிகள், உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் கொண்டவைகளை தவிர்ப்பது நல்லது.. மேலும், அவற்றில் சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உதாரணத்திற்கு, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மற்றும் ரெடிமேட் உணவுகளை தொடவேக்கூடாது.. அத்துடன் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளான குளிர்பானங்கள், இனிப்பு தின்பண்டங்கள், மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்..
அத்துடன் கேக், பேஸ்ட்ரிகள், பிஸ்கட் போன்ற பேக்கரி பொருட்கள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், சீதாப்பழம், சப்போட்டா போன்ற அதிக கலோரி பழங்கள், பச்சை வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கு, யாம், கொல்கேசியா போன்ற வேர் காய்கறிகள் பாதாம், வேர்க்கடலை, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் அத்திப்பழம், பேரீச்சம்பழம், திராட்சை, பாதாமி போன்ற உலர்ந்த பழங்களை தவிர்க்க வேண்டும்.. காராணம் அவை அனைத்தும் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
அதுபோலவே கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளான வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், எண்ணெயில் பொறித்த தின்பண்டங்கள், மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை உண்ணக்கூடாது.. மேலும் இதில் மிக முக்கியமான ஒன்றாக வெள்ளை அரிசி மற்றும் மைதாவை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் சொல்லிகொண்டே உள்ளனர்.. காரணம் இவைகள் எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகள், இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். பழுப்பு அரிசி, முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது உடல் எடையை குறையச் செய்யும். அத்துடன் இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலையும் தடுக்கும்..
உடல் எடையை குறைக்க உண்ண வேண்டிய உணவுகள்
நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உண்பது நல்லது.. இது குறைந்த கலோரிகளுடன் நிறைவான உணர்வைத் தரும். மேலும் பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது.. அத்துடன் முட்டை, மீன், சிக்கன், போன்றவற்றை நீங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது.. அத்துடன் நாம் அனைவரும் வெறுத்து ஒதுக்கும் மிளகாய், எடை குறைப்புக்கு உதவும்.. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு மிளகாய் வரப்பிரசாதம். இது பசியை கட்டுப்படுத்துவதுடன், கொழுப்பை குறைப்பதாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சாத்துக்குடி எடை குறைப்புக்கு சிறந்த உணவு என வல்லுநர்கள் கூறுகின்றனர். தினமும் உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் சாத்துக்குடிப்பழத்தை சாப்பிட்டால், நாம் குறைவாகவே உணவை உட்கொள்வோம். அதுபோல நம்மில் பலருக்கு சூப் பிடிக்கும். ஹோட்டலில் உணவு ஆடர் செய்து விட்டு வர தாமதமானால் சூப் குடிப்போம். ஆனால், ஆரோக்கிய ரீதியாக இது மிகவும் நல்ல பழக்கமாக கருதப்படுகிறது. சூப் இயல்பாகவே குறை அடர்த்தி கொண்ட உணவு. இதில் குறைந்த அளவே கலோரி இருப்பதால் எடை குறைப்புக்கு உதவும்.
அத்துடன் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன்வென்றால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். ஒரு வாரத்தில் சில நாட்கள் உடற்பயிற்சி செய்யவும், மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.. இந்த டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும், எடையைக் குறைக்கவும் ஆரோக்கியமாக உடலை பராமரிக்கவும் முடியும்..