நடிகர் நாகர்ஜுனா
நடிகர் நாகர்ஜுனாமுகநூல்

65 வயதிலும் தான் ஃபிட்டாக இருக்க இதுதான் காரணம்.. தனது இளமையின் ரகசியத்தை சொன்ன நடிகர் நாகர்ஜுனா..!

நடிகர் நாகர்ஜுனா தனது உடலை ஒரே சீராக ஆரோக்கியமாக வைத்திருக்க அவர் 12:12 என்ற இடைப்பட்ட உண்ணாவிரத முறையை (Intermittent fasting) கடைப்பிடிப்பதாகவும் சீரான உடற்பயிற்சியை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்..
Published on

இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்பது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சாப்பிடுவது, மற்ற நேரங்களில் விரதம் இருப்பது போன்ற ஒரு உணவு பழக்க முறையாகும். இது உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.. இந்த இடைப்பட்ட நேர விரதம் (Intermittent Fasting) முறையை கடைபிடிப்பதன் மூலமாக உடல் எடை குறைவதுடன் இதய ஆரோக்கியம், சர்க்கரை நோய் கட்டுப்பாடு, உடல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பது, மூளை செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. இந்த இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் முறையைதான் நான் கடைப்பிடிக்கிறேன் என்று நடிகர் நாகர்ஜுனா கூறியுள்ளார்.. வாங்க இது குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..

நடிகர் நாகர்ஜுனா
தினமும் இவ்வளவு தூரம் நடந்தால் முதுகு வலி குறையுமாம்.. என்ன சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்?

ஹிந்துஸ்தான் டைம்ஸுடனான உரையாடலில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா அக்கினேனி கூறுகையில், "65 வயதிலும் இளமையான தோற்றத்துடனும் ஆரோக்கியமாகவும் பளபளப்பான தோற்றத்துடனும் இருப்பதாக எல்லோராலும் பாராட்டப்படுகிறேன். அதற்கு காரணம் நான், ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கே இரவு உணவை சாப்பிடுகிறேன். " என்றார்.

இந்த உணவில் சாலடுகள், சாதம், கோழிக்கறி மற்றும் மீன் ஆகியவை அடங்கும். இந்த நடைமுறையை அவர் பல வருடங்களாக கடைபிடித்து வருகிறேன்.. அத்துடன் தினமும் உடற்பயிற்சிகளை செய்தல், அப்படி செய்யாத நாட்களில் நடப்பயிற்சி செய்தல் என எனது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.. மேலும் தன்னுடைய நாள் தினமும் உடற்பயிற்சியுடன் தொடங்குகிறது என்பதை கூறினார்.

நடிகர் நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனா

அத்துடன் தான் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து 12:12 என இடைவிடாத உண்ணாவிரதம் முறையை கடந்த 35 வருடமாக கடைபிடிப்பதாகவும் அதனால்தான் நான் இந்த 65 வயதிலும் ஃபிட்டாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.. இந்த 12:12 என்பது, 12 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு மீதமுள்ள 12 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதை உள்ளடக்கியது. அவர் தனது நாளை உடற்பயிற்சிக்கு முந்தைய உணவுடன் தொடங்குகிறார். இதில் கிம்ச்சி, சார்க்ராட் அல்லது புளித்த முட்டைக்கோஸ் போன்ற இயற்கை புரோபயாடிக்குகள், வெதுவெதுப்பான நீர் மற்றும் காபி ஆகியவை அடங்கும். இந்த கலவை அவரது செரிமான அமைப்புக்கு உதவுகிறது மற்றும் அவரது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

நடிகர் நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனா

அத்துடன் நாகார்ஜுனா அக்கினேனியின் இளமையான தோற்றத்திற்கு அவரது உடற்பயிற்சிகள், இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுதல் , புரோபயாடிக்குகளுடன் தனது நாளைத் தொடங்குதல் ஆகியவை முக்கியமான காரணம் என தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியத்தை உடைத்து சொன்னார்.. மேலும் வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்வதாகவும் அப்படி ஜிம் செல்ல வாய்ப்பு இல்லாத நாட்களில், நீச்சல் போன்ற பிற வகையான பயிற்சிகளை செய்கிறார் என்றும் தெரிவித்தார்.. இந்த பழக்கத்தை அவர் தனது டீனேஜ் பருவத்திலிருந்தே கடைபிடித்து வருவதாக தெரிவித்தார்..

இது போன்ற முறைகளை கடைபிடிப்பதன் மூலமாக இதயத் துடிப்பைப் பராமரிக்க முடியும். அதிகபட்ச இதயத் துடிப்பை 70 சதவீதத்திற்கு மேல் வைத்திருக்கவும், மொபைல் போன்கள் போன்ற கவனச்சிதறல்களிலிருந்து விலகி இருக்கவும் முடியும் என்கிறார்.. இந்த பயிற்சி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிக்கிறது.

நடிகர் நாகர்ஜுனா
வல்வோடினியா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகள் இதோ..!

அதிகாலை உணவு, இடைவிடாத உண்ணாவிரதம் மற்றும் சீரான உடற்பயிற்சி போன்ற நாகார்ஜுனாவின் பல நடைமுறைகள் அறிவியல் சான்றுகளால் நொருபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எச்சரிக்கை

இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும். இந்த தகவல் மருத்துவம் சார்ந்த ஆலோசனை அல்ல. மேலும் தகவலுக்கு மருத்துவரை அணுகவும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com