உங்கள் சிறுநீரகங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
சிறுநீரகக் கோளாறுகள் உலக அளவில் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பான செய்திகளை இந்தக் கட்டுரை தருகிறது.
சிறுநீரகக் கோளாறுகள் உலக அளவில் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, உலக மக்களில் 10 பேரில் ஒருவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளது. நாம் உண்ணும் உணவு முதல் குடிக்கும்நீர் வரை, அனைத்தையும் வடிகட்டி நம் உடலை சுத்தமாக வைத்திருக்கும் இரண்டு சிறிய உறுப்புகள்தான் சிறுநீரகங்கள். ஆனால், மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் மருந்துகள் காரணமாக இந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம். இந்த முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்போது, அதுவெளிப்படுத்தும் அறிகுறிகளை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்தால், பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், சிறுநீரில் நுரை இருப்பதும் சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம். கண்கள், முகம், கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யாதீர்கள். இது உடலில் திரவம் தேங்குவதால் ஏற்படும் ஒரு அறிகுறி. கட்டுப்பாடில்லாத உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகரித்து, அரிப்பு மற்றும் சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம். இது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். நம் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, சமச்சீரான உணவு உண்பது இந்த எளிய வழிமுறைகள் உங்கள் சிறுநீரகங்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.