நடைபயிற்சி pt
ஹெல்த்
15 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால்... மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன?
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன? பார்க்கலாம்.
உணவருந்திய பிறகு 15 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், மேலும் 4 வழிகளை பரிந்துரை செய்துள்ளனர். காலையில், கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக, புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரையிலான தூக்கத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும், மன அழுத்தம் ஏற்படாமல் பணிபுரிய வேண்டும் என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், தினமும் 30 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.