ரத்த சர்க்கரை அளவுமுகநூல்
ஹெல்த்
நீரிழிவு இல்லாத 20% பேருக்கு ரத்த சர்க்கரை அளவு சீராக இல்லை!
20 விழுக்காடு பேருக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்புக்கு மாற்றாக இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய் இல்லாத மக்களில் 20 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை அளவு இயல்புக்கு மாறாக இருப்பதாகவும், ஆனால், இது குறித்து அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு 3,971 பேரிடம் சோதனை மேற்கொண்டது. இதில் 1,246 பேருக்கு நீரிழிவு நோயும், 572 பேருக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்புக்கு மாறாகவும் இருந்துள்ளது . ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்புக்கு மாறாக இருப்பவர்களில் பெரும் பகுதியினர், உடற்பருமன் கொண்டவர்களாகவும் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்களாகவும் இருப்பது அந்தச் சோதனையில் தெரியவந்துள்ளது.