Kodaikanal-லில் கட்டப்பட்டுள்ள அழகான Light weight பட்ஜெட் வீடு

ஒரு வீட்டோட பட்ஜெட் என்பது, எங்கே வீட்டை கட்டுகிறோம். என்ன பொருளை வைத்து கட்டுகிறோம் என்பதை வைத்துதான் தீர்மானிக்கப்படும். அதனால் நாம் இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீடு கட்டும்போது, குறைவான பட்ஜெட்டில் வீட்டை கட்டலாம்.
கொடைக்கானல் Light Weight வீடு
கொடைக்கானல் Light Weight வீடுபுதிய தலைமுறை

சம பரப்பளவில் வீடு கட்டுவதை விட ஹில் ஏரியாவில் (மலை பிரதேசங்களில்) வீடு கட்டுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அதற்காக முடிந்த வரைக்கும் நாம் லைட் வெயிட் மெட்டீரியல் (Light Weight Material) பயன்படுத்தி வீடு கட்டினோம் என்றால் நிலச்சரிவில் இருந்து நமது வீட்டை பாதுகாக்கலாம். அப்படி லைட் வெயிட் மெட்டீரியல் பயன்படுத்தி கொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டைப் பற்றிய சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

Hall
Hallpt desk

வீட்டின் உரிமையாளர்கள் சொல்வதென்ன?

“இந்த வீட்டை கட்டுவற்கு 3னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தபோது, அதேபோல் வீடு வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், கட்டி முடித்து இன்டீரியல் ஒர்க் எல்லாம் முடிந்த பிறகு, சொன்னது போல் வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது” என்கிறார் வீட்டின் உரிமையாளர் யாமினி.

“எனக்கு இந்த வீட்டிலேயே ரொம்ப பிடிச்ச இடம், மேலே இருக்கிற பெட்ரூம் தான். ஏனென்றால் காலையில் எழுந்ததும் சன்ரைஸ் பார்க்க முடியும். அதனால மைண்ட் ரொம்ப பீஸ் ஃபுல்லா இருக்கும்” என்கிறார் பவித்ரா.

பிளின்த் ஃபீம் (Plinth Beam)

இந்த வீட்டோட அடித்தளம், ரீட்டெய்னிங் சுவருக்கு (Retaining Walls) மேலே அமைந்துள்ளதால் பவுண்டேஷனுக்கு என்று தனியாக ஆகும் செலவு குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரீட்டெய்னிங் சுவருக்காகவே பெரிய தொகையை செலவு செய்திருக்கிறார்கள். ரீட்டெய்னிங் சுவருக்கு மேல் ஆர்சிசி ஸ்லாப் (RCC Slab) எடுத்து அதுக்கு மேல் பிளின்த் ஃபீம் வைத்து அதற்கு மேலே செங்கல் மற்றும் சிமெண்ட் கலவை பயன்படுத்தி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீட்டில் மொத்தமாக 4 ரீட்டெய்னிங் சுவர்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே கான்கிரீட் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

Pine tree sealing
Pine tree sealingpt desk

வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்க பைன் மரங்கள் (Pine trees):

இந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் டபுள் ஹைட் சீலிங்குடன் (Double Height Ceiling) கூடிய காம்பாக்ட் ஹால் (Compact Hall) இருக்கிறது. அதோடு சேர்ந்த ஓப்பன் டைனிங் ஏரியாவும் இருக்கிறது. வெளியே இருக்கும் குளிரைவிட வீட்டிற்குள் நுழைந்ததும் கொஞ்சம் வெப்பம் அதிகமாகத்தான் இருக்கிறது. வழக்கமாக சமதள பரப்பில் கட்டப்படும் வீடுகளில் வெளியே சூடாகவும் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், இந்த வீட்டில் வெளியே குளிராகவும் உள்ளே சூடாகவும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த வீட்டிற்கு அவர்கள் பைன் மரங்களை பயன்படுத்தி போட்டிருக்கும் சீலிங்தான். பைன் மரங்களை பயன்படுத்தி சீலிங் போடுவது Cheap and Best என்றே சொல்லலாம்.

கொடைக்கானல் Light Weight வீடு
தென்னந்தோப்பின் நடுவே... 65 லட்சம் செலவில் அழகான ‘தொட்டி கட்டு’ வீடு!

டபுள் ஹைட் லிவ்விங் ஏரியா (Double height living area) ஏன்? சொல்கிறார் கட்டட வடிவமைப்பாளர்...

“இந்த வீட்டை அமெரிக்கன் ஃபார்ம் ஹவுஸ் போல டிசைன் பண்ணியிருக்கேன். கொடைக்கானலில் வீடு கட்டுவதே அதனோட அழகான வ்யூவிற்காகதான். அது இங்கு நிச்சயம் கிடைக்கும். அதுவும் அந்த அழகை வீட்டுக்கு உள்ளேவும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்த லிவ்விங் ஏரியாவை டபுள் ஹைட் பண்ணி பிரன்ஸ் விண்டோஸ் அமைக்கப்பட்டுள்ளன. லிவ்விங் ரூமில் இருந்து பார்த்தால் முழு சீனும் தெரிய வேண்டும் என்பதற்காக அமைத்துள்ளோம்” என்றார் கட்டட வடிவமைப்பாளர் ஜீன் ஜோசப்.

C shape open kitchen
C shape open kitchenpt desk

C ஷேப் ஓப்பன் கிச்சன் (C shape open kitchen)

அடுத்ததாக, இந்த வீட்டின் ஓப்பன் கிச்சன். இதை சி ஷேப் கிச்சன் என்றே சொல்லலாம். கிச்சன் ஸ்லாப் அமைக்க அழகான, நீளமான டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த வீட்டில் உள்ள பெட்ரூம். இந்த பெட்ரூம் தரைத் தளத்தைவிட ஒன்றரை அடி உயரம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு இந்த இடத்தில் இருந்த பாறைதான் காரணம். அந்த பாறையை அகற்ற முடியாததால் ஒன்றரை அடி உயர்த்தப்பட்டுள்ளது.

ரீட்டெய்னிங் சுவர் (Retaining wall)

இந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூமில் ஜன்னலுக்கு அருகே ஒரு சீட்டிங் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பே விண்டோ (Bay Window) போல இருந்தாலும். இதை விண்டோ சிட்டிங் என்றே சொல்லலாம். இந்த வீட்டின் எல்லா சீலிங்கிற்கும் ஆர்சிசி சீலிங்-தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஃபால் சீலிங் பண்ணாமலே, ஃபால் சீலிங் (Fall Ceiling) லுக்கை நமக்குக் கொடுக்கிறது. மலைப்பகுதியில் வீடு கட்டும்போது, நாம் எந்த இடத்தில் வீடு கட்டுகிறோம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

கொடைக்கானல் Light Weight வீடு
காற்றோட்டம் + வெளிச்சம்: இன்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தி கட்டப்பட்ட ஸ்மார்ட் & சூப்பர் பட்ஜெட் வீடு!

வீடு கட்டும் நிலபரப்பு சமமாக இருந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஸ்லோப்பாக (சாய்வாக) இருந்தால் அதற்கு கண்டிப்பாக ரீட்டெய்னிங் சுவர் கட்டியே ஆக வேண்டும். மலைப்பகுதிகளில் வீடு கட்டும்போது கட்டாயம் இந்த ரீட்டெய்னிங் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். நிலச்சரிவு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரீட்டெய்னிங் சுவர் எழுப்பப்படுகிறது.

french window design
french window designpt desk

பிரஞ்சு விண்டோ (French window)

அடுத்ததாக இந்த வீட்டின் நீளமான பால்கனி. ரீட்டெய்னிங் சுவர் முழுவதுமே பால்கனி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பால்கனியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பிரன்ஸ் விண்டோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு பிளாக் கேலக்ஸி கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல படிக்கட்டின் கைப்பிடிக்கு பைன் மரங்களை பயன்படுத்தி இருக்கின்றனர்.

new house
new housept desk

மாடிக்கு செல்லும் வழியில் டார்மர் விண்டோ அமைக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறது. நாம் குனிந்து செல்லவேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல இந்த வீட்டின் தரைத்தளத்துக்கு மரத்தால் செய்யப்பட்டது போன்ற வெர்டிஃபைடு மேட் பினிஸ் டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் Light Weight வீடு
எவ்ளோ வெயில் அடிச்சாலும் உள்ளே 'கூல்'தான்: வெறும் ரூ.38 லட்சம் செலவில் ’Rat Trap Bond’ மாடல் வீடு!

அமெரிக்கன் ஸ்டைலில் இன்டீரியல் டிசைன் (American style interior design)

இந்த வீட்டின் இன்டீரியல் டிசைன் அமெரிக்க ஸ்டைலில் செய்யப்பட்டுள்ளது. ஒயிட் அண்டு பிளாக் கலர் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,200 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 30 லட்சம்தானாம். அதில் 4 ரீட்டெய்னிங் சுவருக்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

இந்த வீட்டை, விஷூவலாக ஹோம் டூர் போல பார்க்க விரும்புவோர், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com