காற்றோட்டம் + வெளிச்சம்: இன்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தி கட்டப்பட்ட ஸ்மார்ட் & சூப்பர் பட்ஜெட் வீடு!

குறைந்த செலவில் வீடுகட்ட வேண்டும் என்ற தேர்வில் இன்டர்லாக் கற்களுக்கு எப்பவுமே ஒரு தனியிடம் உண்டு. இந்த தொகுப்பில் இன்டர்லாக் கற்களால் திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டின் சிறப்பை பார்க்கலாம்.
வீடு
வீடுPT Prime

இந்த வீட்டின் சிறப்பை பற்றி உரிமையாளர் ஹரிஹரன் சொன்னதென்ன?

“சிமெண்ட் செலவை குறைத்து, இந்த பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அதேபோல் ஏசி பயன்படுத்தாமல் இயற்கையான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹாலில் ஒரு ஓப்பன் வைத்துள்ளோம். அதன் மூலம் நல்ல காற்று கிடைக்கிறது. வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வரும்போது வெப்பம் குறைவாக இருப்பதை உங்களால் உணர முடியும். வெப்ப காலத்தில் கடும் வெப்பமாக இல்லாமலும், கடும் குளிர் காலத்தில் குளிர் இல்லாமலும் வெப்பத்தை சமன்படுத்துவது போல் எங்கள் வீடு இருக்கும்” என்றார் வீட்டின் உரிமையாளர் ஹரிஹரன்.

hall
hallpt desk

லிண்டல் பீமுக்கு (Lintel beam) பதிலாக போடப்பட்டுள்ள கட் பீம் (Cut Beam)!

இந்த வீட்டிற்கு லோ பேரிங் பவுண்டேஷன் (Low Bearing Foundation) போடப்பட்டுள்ளது. அதில் 4 அடி பவுண்டேஷன், 3 அடி பேஸ்மென்ட் என மொத்தம் 7 அடிக்கு போடப்பட்டுள்ளது. அதுக்கு மேல் பிளித் பீம் (Plinth Beam) 1 அடிக்கு போட்டுள்ளனர். ஆனால், லிண்டல் பீம் எங்கும் போடப்படவில்லை. எங்கெல்லாம் லிண்டல் பீம் தேவையோ அந்த இடத்தில் கல் பயன்படுத்தி கட் பீம் போடப்பட்டுள்ளது.

மறு பயன்பாடு செய்யப்பட்ட கதவு மற்றும் ஜன்னல்!

இந்த வீட்டின் காம்பவுண்ட் கதவு அமைக்கப்பட்டுள்ள பகுதியில், கல்லை பயன்படுத்தி ஆர்ச் (Arch) போடப்பட்டுள்ளது. கதவுக்கு ஜிஐ பைப் (GI Pipe) பயன்படுத்தி அதற்மேல் ஃபைன் (Pine) மரத்தால் முன்கதவு போடப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டின் முன்கதவு டிசைன் செட்டிநாடு கட்டடக் கலையை பிரதிபலிப்பது போல் இருந்தது. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மறுபயன்பாடு செய்யப்பட்டவை. ஆனால், முன்கதவு மட்டும் புதிதாக செய்யப்பட்டுள்ளது.

maruthi tiles
maruthi tilespt desk

வீட்டு ஹாலின் சீலிங்கில் (Ceiling) அமைக்கப்பட்டுள்ள ஓப்பன் ஸ்பேஸ் (Open Space)!

வீட்டின் நடு முற்றத்தில் வைக்கப்படுவது போல், இந்த வீட்டு ஹாலின் மேற்பகுதியில் ஒரு ஓப்பன் வைத்துள்ளார் உரிமையாளர். இது வெளிச்சத்திற்காக மட்டுமின்றி காற்றிற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாலின் உள்ளே காற்றுவர ஏதுவாக அதில் டெரக்கோட்டா ஜாலி ஒர்க் (Terracotta Jali Work) செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹால் பகுதியில் நல்ல வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் காணப்படுகிறது. அதேபோல ஹாலின் தரைத்தளத்துக்கு ஆத்தங்குடி செட்டிநாடு டைல்ஸ் போடப்பட்டுள்ளது.

வீடு
தென்னந்தோப்பின் நடுவே... 65 லட்சம் செலவில் அழகான ‘தொட்டி கட்டு’ வீடு!

மேட் பினிஷ் வெர்டிஃபைடு டைல்ஸ் (Matte finish Vitrified Tiles) பயன்படுத்தப்பட்ட கிச்சன் தரை!

ஆனால், இந்த வீட்டின் கிச்சன் தரைத்தளத்துக்கு மேட் பினிஷ் வெர்டிஃபைடு டைல்ஸ் போடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், கிச்சனில் அடிக்கடி தண்ணீர் கொட்டும் என்பதால் இந்த டைல்ஸ் போட்டுள்ளனர். ஆத்தங்கரை டைல்ஸ் போட்டால் விரைவில் ஃபேடாகிவிடும் (மங்கிவிடும்) என்பதால் வெர்டிஃபைடு டைல்ஸ் போட்டிருக்காங்க. அதேபோல் கிச்சன் ஸ்லாப்-க்கு கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

floor tiles
floor tilespt desk

காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள கார்னர் ஜன்னல்கள்!

வீட்டின் வெளியே இருக்கும் காற்றை வீட்டின் உள்ளே கொண்டுவந்துவிட்டால் அந்த வீட்டின் டிசைன் சக்சஸ் என்றே சொல்லலாம். இந்த வீட்டில் காற்றோட்டம் தவிர மண்சார்ந்த நிறைய விஷயம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூமில் இருபுறமும் கார்னர் விண்டோஸ் வைக்கப்பட்டுள்ளது. இது கிராஸ் வெண்டிலேசனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வீட்டில் நீளமான ஒரு திண்ணை இருக்கிறது. இதன் இருக்கைக்கு கடப்பால் கல் போடப்பட்டுள்ளது. இந்த திண்ணை பகுதியில் டபுள் டைல் ரூஃபிங் (Double Tile Roofing) போடப்பட்டுள்ளது.

டபுள் ஹை சீலிங் (Double High Ceiling)

மாடிக்கு செல்லும் படிக்கட்டு வீட்டின் உள்ளே அமைந்துள்ளது. இதன் கைப்பிடிக்கு தேக்கு மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படிக்கட்டு மரத்தால் செய்யப்பட்டது போல் இருக்கிறது. ஆனால் அது மரம் அல்ல. அதற்கு பதிலாக மரத்தினாலான டிசைன் போல், மேட் பினிஷ் வெர்டிஃபைடு டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடக்கும் போது நல்ல கிரிப்பாக (Grip) இருக்கிறது. படிக்கட்டு ஏரியாவுக்கு டபுள் ஹை சீலிங் போடப்பட்டுள்ளது. அதில் வெளிச்சத்திற்காக ஒரு ஓப்பன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நல்ல வெளிச்சமும் காற்றும் வருது.

வீடு
காற்றோட்ட வசதியுடன் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான பண்ணை வீடு!
interlock bricks wall
interlock bricks wallpt desk

மண்ணால் செய்யப்பட்ட இன்டர்லாக் பிரிக்ஸ் சுவர் (Interlock Bricks Wall)

இந்த வீட்டின் சுவரை எழுப்ப மண்ணால் செய்யப்பட்ட இன்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிக்ஸ் பயன்படுத்துவதால் சிமெண்ட் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். அதற்கு காரணம் என்னவென்றால் ஒரு செங்களுக்கும் மற்றொரு செங்களுக்கும் இடையே சிமெண்ட் கலவை தேவையில்லை. அதேபோல் மேலே பூசவேண்டிய அவசியமும் இல்லை. இந்த இன்டர்லாக் பிரிக்ஸ் கற்களை கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.

நான்கு வகையான தரைத்தளங்கள்

இன்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தி வீடுகள் கட்டும்போது வீட்டின் வயரிங் வெளியேதான் இருக்கும். சுவரை உடைத்து வயரிங் செய்ய முடியாது. வயரிங் வெளியே இருப்பதால் நன்றாக இருக்காது என்று நினைப்பார்கள். ஆனால், இங்கு சுவரின் வெளியே செய்யப்பட்டுள்ள வயரிங் பார்ப்பதற்கு அழகாவே இருக்கிறது. இந்த வீட்டில் சின்னதாக ஒரு பால்கனி இருக்கு. இந்த வீட்டோட முன்பகுதி மற்றும் திண்ணை பகுதி தரைத்தளத்துக்கு ரெட் ஆக்சைடு (Red Oxide) போடப்பட்டுள்ளது. ஹாலில் ஆத்தங்கரை டைல்ஸ் போட்டுள்ளனர். கிச்சனில் வெர்டிஃபைடு டைல்ஸ் மற்றும் பெட்ரூமில் தரையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

steps
stepspt desk
வீடு
பட்ஜெட் வெறும் ரூ.35 லட்சம் தான்! மறு பயன்பாடு செய்யப்பட்ட பொருட்களால் கட்டப்பட்ட சொகுசு வீடு!

களிமண்ணால் செய்யப்பட்ட மாருதி பிளாக்ஸ்

இந்த வீட்டிற்கு பில்லர் ஸ்லாப் சீலிங் (Filler Slab Ceiling) போடப்பட்டுள்ளது. இதற்கு களிமண்ணால் செய்யப்பட்ட மாருதி பிளாக்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மண்சார்ந்த பொருட்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வீட்டில் காற்றோட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

1,360 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு ரூ.25 லட்சம்தான்!

இந்த வீட்டை காணொளி வடிவில் இங்கே காணலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com