சிவகங்கை: குழந்தை கொன்று புதைத்துவிட்டு நாடாகமாடிய காதல் தம்பதியர்! விசாரணையில் வெளிவந்த உண்மை!

சிவகங்கை அருகே 4 மாத குழந்தை இறந்ததை அடுத்து புதைக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக தாய், தந்தை சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஆர்.சௌந்திரநாதன்

சிவகங்கை அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (42). இவர் கோவையில் டீ கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சு என்பவரை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது.

Police team
Police teampt desk

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மே 20 ஆம் தேதி சொந்த ஊரான நாட்டகுடிக்குச் சென்றனர். அங்கு மர்மமான முறையில் இறந்ததாகக் கூறி அவர்களது குழந்தையை, யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டதாக திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Accused
சென்னை: பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - மேலும் ஒருவர் கைது

இதனை தொடர்ந்து சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவதன்று தனது மனைவி மஞ்சு, சிவகங்கைக்கு குழந்தையுடன் சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை மொபைலில் தொடர்பு கொண்டபோது குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே பையில் வைத்துவிட்டு, நாகர்கோவில் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

Arrested
Arrestedpt desk

இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது குழந்தை சடலமாக கிடந்தது. இதைத் தொடர்ந்து தனது தாயார் காளிமுத்துவுடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகர் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவக் குழுவினர் மூலம் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்தது தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தை பிறப்பில் சந்திரசேருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர், மஞ்சு, அவர்களுக்கு உடந்தையாக இருந்த காளிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Accused
சென்னை: ஒரே நேரத்தில் தனி அறையில் இறந்துகிடந்த மூத்த தம்பதியர் - பல கோணங்களில் போலீசார் விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com