சென்னை: ஒரே நேரத்தில் தனி அறையில் இறந்துகிடந்த மூத்த தம்பதியர் - பல கோணங்களில் போலீசார் விசாரணை!

மதுரவாயலில் ஒரே நேரத்தில் மூத்த தம்பதிகள் உயிரிழந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரது உடலையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Senior couple
Senior couplept desk

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை மதுரவாயல் செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர்கள் முத்துக் காமாட்சி (95) பவுனு அம்மாள் (87) தம்பதியர். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த தம்பதியர் இருவரும் தங்களது மகனுடன் ஒரே கம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டின் ஒரு அறையில் முதியவர் முத்துக் காமாட்சியும் மற்றொரு அறையில் முதாட்டி பவுனு அம்மாளும் சடலமாக கிடந்துள்ளனர்.

Police investigation
Police investigationpt desk

இதையடுத்து அவரது உறவினர்கள் இருவரது உடலையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர், இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த மூத்த தம்பதியர் முதுமை காரணமாக உயிரிழந்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Senior couple
ஈரோடு: விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்

உயிரிழந்த தம்பதியரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தம்பதிகள் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com