சென்னை: பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் - மேலும் ஒருவர் கைது

சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது. சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில், தேனாம்பேட்டையை சேர்ந்த இடைத்தரகர் நதியா, அவரின் சகோதரி சுமதி உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

சென்னையில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை விபச்சார தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு சென்னை வளசரவாக்கம் பகுதியில், பள்ளிச்சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக விபச்சார தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சோதனை செய்த அதிகாரிகள், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 70 வயது முதியவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நதியா, அவரது சகோதரி சுமதி, சுமதியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் போன்றோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மொத்தமாக 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com