மதுபானக் கடையை திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. ஓட்டை போட்டு ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்!

உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் அரசு மதுபானக் கடையின் சுவரில் ஓட்டை போட்டு பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் சுமார் 30,000 ரொக்கம் கொள்ளை.
கொள்ளைபோன மதுபானக் கடை
கொள்ளைபோன மதுபானக் கடைபுதிய தலைமுறை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று வழக்கம்போல கடையை திறந்தி விற்பனை செய்ய சேல்ஸ்மேன்கள் சென்றுள்ளனர்.

அப்போது, கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பக்கவாட்டில் பெரிய ஓட்டை போடப்பட்டு உள்ளே இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மதுபான பாட்டில்கள் மற்றும் 30,000 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.

கொள்ளைபோன மதுபானக் கடை
மதுரை: ‘மதுபோதையில் என் தந்தையுடன் தகராறு செய்வியா?’ - நண்பர்களின் உதவியோடு கொலை செய்த சிறுவன்

இதற்கிடையே, சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி ஜூலியஸ் சீசர், சாலவாக்கம் காவல் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர், இந்த மதுபான கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபர்கள் யாரேனும் மது பாட்டில்களை திருடிச்சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளைபோன மதுபானக் கடை
செங்கல்பட்டு: கேஸ் கசிவால் பரவிய தீ – 3 குழந்தைகள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com