அடை மழையில் நடந்த திருட்டு.. மங்கி குள்ளா திருடர்களை இரண்டே நாட்களில் தட்டித்தூக்கிய போலீஸ்!

அடை மழையிலும் மங்கி குள்ளா அணிந்தபடி காப்பர் கேபிள்களை திருடிய திருடர்கள். 2 நாட்களில் சுற்றிவளைத்த போலீஸார்அரியலூர் - மங்கி குள்ள‌அணிந்து காப்பர் கேபிளை திருடிய 4 பேர் கைது - கேபிள் மற்றும் ஜீப் பறிமுதல்
திருடர்கள் கைது
திருடர்கள் கைதுபுதியதலைமுறை

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த காப்பர் கேபிள்கள் கடந்த 26ஆம் தேதி திருடப்பட்டது. மங்கி குள்ளா அணிந்து அடை மழையிலும் விடாமல் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியான நிலையில், விவகாரம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் தனி படைபோலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருடர்கள் கைது
“உன்னை விட சாமி இல்ல..”- இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் குரல்..!

அப்போது திருட்டில் ஈடுபட்டவர்கள், திருச்சியைச் சேர்ந்த ஐயப்பன், தினேஷ் குமார், வசந்தன், கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், திருட்டுக்கு அவர்கள் பயன்படுத்திய ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

திருடப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் கேபிள் ஒயர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com