கொரோனா வைரஸ்
"உடல் செயல்பாடுகள் குறைந்தால் தீவிர கொரோனா வரும்!" - அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
"உடல் செயல்பாடுகள் குறைந்தால் தீவிர கொரோனா வரும்!" - அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
உடல் ரீதியான செயல்பாடுகள் குறைவாக இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருப்பதுடன் இறப்பு விகிதமும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் பட்டியலை கொண்டு நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக்கு பின் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக உடல் ரீதியாக குறைவான செயல்பாடுகளை கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

