மலையாள சினிமாவில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா! | Yuvan Shankar Raja | Paripadi
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மலையாளத் திரைப்படத்தில் இசையமைக்கிறார். ஜோஜூ ஜார்ஜ் இயக்கும் ‘PARIPADI’ படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதிக்கிறார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு, அன்பறிவ் ஸ்டண்ட் என வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் இந்த படம் உருவாகிறது; ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானவர் பலவிஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போதுவரை அவரது பல பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழில் அறிமுகமானவர், தெலுங்கு சினிமாவில் `Seshu' படத்தின் மூலம் 2002ல் அறிமுகமானார். பின்னர் `7G Brindavan Colony', `Happy', `Raam', `Aadavari Matalaku Ardhalu Verule', `Oy!', `Panjaa', `Govindudu Andarivadele' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். கன்னடத்தில் `Madana', `Gilli', `Jolly Boy', `Ajith' போன்ற படங்களுக்கும், இந்தியில் `Striker', `Raja Natwarlal' ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இப்போது சினிமாவில் அறிமுகமாகி 29 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் மலையாளப்படத்துக்கு இசையமைக்க உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா, அதன் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிரபல நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் 2024ல் வெளியான `பனி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படமும் பெரிய ஹிட்டானது. இவர் அடுத்ததாக PARIPADI என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலமாக தான் மலையாளத்தில் கால் பதிக்கிறார் யுவன். இப்படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு , அன்பறிவ் ஸ்டண்ட் என பெரிய கூட்டணி இணைந்துள்ளது.

