Mr X review
AryaMr X

விறுவிறு திரைக்கதை, பரபர திருப்பங்கள்.. சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? | Mr. X Review

ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தை விறுவிறுப்பாகவும், திருப்பங்களோடும் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.
Published on
விறுவிறு திரைக்கதை, பரபர திருப்பங்கள்... சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?(2 / 5)

நாட்டுக்கு வரப்போகும் ஆபத்தை தடுக்க கிளம்பும் குழுவின் சாகசங்களே `மிஸ்டர் எக்ஸ்'.

கௌதம் (ஆர்யா) ரா ஏஜெண்ட்டாக சென்னையில் பணியாற்றுகிறார். அவரின் மேலதிகாரி இந்திரா (மஞ்சு வாரியர்) சொல்லும் ஹவாலா பரிமாற்றங்களை தடுக்கும் மிஷன்களை தன்னுடைய குழுவின் துணையுடன் தடுக்கிறார். பகலில் கீர்த்தனாவுடன் (அனகா) ரொமான்ஸ், இரவில் அதிரடி ஆக்ஷன் என செல்கிறது அவரது வாழ்க்கை. இன்னொரு பக்கம் தொலைந்து போன அணு ஆயுதங்களை கண்டுபிடிக்க சென்ற இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ் (சரத்குமார்), ஆயுதத்துடன் எதிரிகளிடம் சிக்கிக் கொள்கிறார். அவரை மீட்கும் ஆப்ரேஷன் அமரனிடம் (கௌதம் ராம் கார்த்திக்) கொடுக்கப்படுகிறது. ஆனால் அவரும் மிஸ்ஸிங் ஆக, இப்போது அந்த பொறுப்பு கௌதமுக்கு வருகிறது. கூடவே சென்னையில் உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டின் போது தாக்குதல் நடக்க இருப்பதாகவும் தகவல் வருகிறது. இதன் பின் என்ன நடந்தது? கௌதமுக்கு இந்த மிஷனுக்கும் இருக்கும் பர்சனல் கனெக்ட் என்ன? நடக்க இருக்கும் தாக்குதலுக்கான காரணம் என்ன? அதை தடுத்தார்களா என்பதெல்லாம் தான் இந்த மிஸ்டர் எக்ஸ் பட மீதிக்கதை.

Mr X
Mr X
Mr X review
"தமிழ் படத்துக்கு வேற்று மொழி ஹீரோயின் ஏன்?" - விக்னேஷ் ராஜா தந்த பதில் | Kara | Mamitha Baiju

ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தை விறுவிறுப்பாகவும், திருப்பங்களோடும் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

முதன்மை பாத்திரத்தில் ஆர்யா கட்டுமஸ்தான உடலுடன் விறைப்பும் முறைப்புமாக வருகிறார். காதலியுடன் ரொமான்ஸ், உண்மையை மறைத்து தயக்கம் காட்டுவது, இழந்த குடும்பத்தை நினைத்து வருந்துவது என எமோஷனல் முகமும் காட்டுகிறார். வித்தியாசமான ரோலில் கௌதம் கார்த்திக் தன்னால் முடிந்த அளவு, சுவாரஸ்யமாக அந்த பாத்திரத்தை கொண்டு செல்கிறார். எல்லோரையும் சிரித்த முகத்துடன் அவர் கையாளும் விதம் டெரர் சேர்க்கிறது. உயர் அதிகாரி வேடத்தில் கெத்தாக வருகிறார் மஞ்சு வாரியர். நடிப்புக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், ஆக்ஷனில் ஒரு கை பார்க்கிறார். அனகா பாட்டுக்கு மட்டும் வரும் ஹீரோயினாக தன் வேலையை பொறுப்பாக முடிக்கிறார். எக்ஸ்டெண்டட் கேமியோவில் சரத் அசத்தல். இவர்கள் தவிர அதுல்யா, ரைசா வில்சன், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் எனப் பலரும் இருக்கிறார்கள்.

Mr X
Mr XJONESCLICKZ

இப்படத்தின் பெரிய பலமாக பரபரவென நகரக்கூடிய திரைக்கதையை சொல்லலாம். ஆர்யா கதை, சரத்குமார் கதை, அணு ஆயுத கதை என பல டிராக்களில் கதை நகர்வதும், இடையே சொல்லப்படும் நிறைய டீட்டெய்ல்களும் என பார்வையாளரை எப்போதும் கவனிக்க வைக்கும்படி இருக்கிறது படம். ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக்காட்சிகள் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது, பரபரப்பையும் சேர்க்கிறது. அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. திபு நினன் தாமஸ் பின்னணி இசை படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பொருந்துகிறது. ஆனால் பாடல்கள் அத்தனை ஈர்க்கவில்லை.

Mr X
Mr X

ஒரு பெரிய கான்ஸ்பிரசி, அதை கண்டுபிடிக்க திணறும் அரசு அமைப்பு, களத்தில் போராடும் உளவாளிகள், சதிகள், சாகசங்கள், திருப்பங்கள் என ஒரு ஸ்பை த்ரில்லருக்கு தேவையான நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவை எதுவும் சுவாரஸ்யமாக இல்லை என்பது தான் பிரச்சனை. ஒரு பக்கம் அளவுக்கு மீறி திணிக்கப்படும் ஏகப்பட்ட தகவல்கள், இன்னொரு பக்கம் எமோஷனலாக சுத்தமாக ஒட்டாத குடும்ப செண்டிமெண்ட் இவையும் பெரிய சொதப்பல்.

Mr X
Mr X
Mr X review
ஜனநாயகன் படத்தை லீக் செய்த உதவி எடிட்டர்.. கைதுசெய்த சைபர் கிரைம் போலீஸார்!

இப்படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த எல்லா திருப்பங்களும் மிக எளிதில் நம்மால் யூகிக்க முடிகிற வகையில் தான் இருக்கின்றன. பொதுவாக இப்படியான படங்கள் விறுவிறுப்பாக நகரும் போது பார்வையாளர்களுக்கு லாஜிக் கேள்வி எதுவும் ஏழாது. ஆனால் இப்படம் பார்க்கும் போதே ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ஆர்யாவின் தங்கை என காட்டப்படும் நபர் உண்மையில் யார்?, ஒரு முக்கிய கதாபாத்திரம் எப்படி மூளை சலவை செய்யப்பட்டு இந்தியாவுக்கு எதிராக திருப்பப்பட்டார்? ராணா என்ற பாத்திரம் எப்படி உருவானது என்பதை வெறுமனே வசனங்கள் மூலமே சமாளிக்க முயற்சித்தது ஏன்?

Mr X
Mr X

படத்தின் இறுதியில் `மிஸ்டர் எக்ஸ் 2'-க்கு லீடு கொடுக்கப்பட்டிருப்பதால், ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் அதில் விடை இருக்கும் என படக்குழு சொல்லலாம். சரி ஓக்கே, ஆனால் இதை எல்லாம் விட பெரிய சந்தேகம், ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் உயிருக்கு ஆபத்து வரும் போது, ஸ்லோமோஷனில் 10 கிலோமீட்டர் ஓடியே போய் காப்பாற்ற ஆர்யா முற்படுவது ஏன்?

ஒட்டு மொத்தத்தில் இன்னும் தெளிவான திரைக்கதையில், தரமான திருப்பங்களை சேர்த்து கொடுத்திருந்தால் சுவாரஸ்யமான த்ரில்லராக ஈர்த்திருக்கும் இந்த மிஸ்டர் எக்ஸ்.

Mr X review
’நடிகனுக்காக விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்கமுடியாது’ - விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com