யார் SuperStar..? ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன்? பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
50 ஆண்டுகால சினிமா பயணம், Black & White காலத்திலிருந்து AI-வரை ரசிகர்கள் டிக்கெட்டை பறக்கவிட்டு விசிலடித்து கொண்டாடும் ஒரே நடிகர், ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி என்பதில் மக்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனால் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் விஜய் வாழத்து தெரிவிக்கவில்லை.
கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்...விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியான சமயத்தில் காக்கா கழுகு பிரச்சனை உச்சத்தில் இருந்தது.. விஜய் தான் Superstar என்று அவர் ரசிகர்கள் கூற ரஜினி தான் One and Only Superstar என்று அவரது ரசிகர்கள் கூற... இப்படி மாறி மாறி சமூகவலைத்தளங்களில் இருவரது ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இந்த விவாதம் லியோ பட விழா மேடைக்கு வரைக்கும் வந்ததுதான் அப்போதைய Hot topic-ஆக இருந்தது. ரஜினி விஜய் ரசிகர்கள் இடையேயான இந்த மோதலுக்கு லியோ பட விழா மேடையிலேயே நடிகர் விஜய் `ஒரே Super Star ரஜினி தான்' என்று பேசி End Card போட்டு ரசிகர்களிடையிலுள்ள மோதலை முடித்துவைத்தார். ஆனாலும் தற்போது வரை அணையாத அந்த Super Star சர்ச்சை. ரஜினியின் பிறந்தநாள் அன்றும் அங்கும் இங்குமாக பேச்சும், வார்த்தை மோதலும் அடிப்பட்டு வருவதாற்கான காரணம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்றால் நம்ப முடிகிறதா..?
என்ன காரணம்?
கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரம் முன் வரை, சனிக்கிழமை என்றாலே மொத்த சோசியல் மீடியாவும் Active-ஆக தொடங்கி ஒருவாரத்திற்கு தவெக மக்கள் பரபரப்புரை பற்றிய பேச்சு தான் பிரதானமாக இருந்து வந்தது. அந்த ஒரு நாள், கரூர் சம்பவம் மொத்தத்தையும் தலைகீழாக மாற்றியது. பின் Flight Mode-ல் போன தவெக தற்போதுதான் மக்கள் மத்தியில் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கரூர் சம்பவம் சீனாவின் செய்தித்தாள்களில் வரும் அளவிற்கு பேசும்பொருளானது. அந்த சமயத்தில் நடிகர் ரஜினியின் ட்வீட் தான் தவெகவினரையும் விஜய் ரசிகர்களையும் கடுப்பாக்கியது.
நடிகர் ரஜினி கரூர் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது பலரையும் கவனிக்க வைத்தது. எந்தவொரு சமூக பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத ரஜினி கரூர் சம்பவத்திற்கு மட்டும் குரல் கொடுத்த போது நடுநிலையில்லாமல் ரஜினி செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது. அதே போல் கூலி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவிலும் லோகேஷ் இயக்கிய விஜய் படத்தை தவிர்த்துவிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அரசியல் வருகைக்கு பிறகும் அதாவது கடந்த வருடம் கூட ரஜினியின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது ரஜினியின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. பிரதமர், முதலமைச்சர், நடிகர்கள் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் One and Only Superstar என பதிவிட்டிருந்தது, கிடைக்குற கேப்பில எல்லாம் Score பன்றியே சிவாஜி என்பது போல் தான் இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் ஜனநாயகன் படத்துடன் SKவின் பராசக்தி படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

