”இந்தியாவில் ஆண் ஆதிக்க படங்கள் சிறப்புப் பெறுவது ஏன்?” - நறுக்கென்று கேட்ட பாலிவுட் நடிகை!
ஆண் ஆதிக்கத் திரைப்படங்கள் ஏன் இவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பது குறித்து பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஆண் ஆதிக்கத் திரைப்படங்கள் ஏன் இவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பது குறித்து பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர், ”அவை குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன. நம் நாட்டில் ஆண்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நம் நாட்டின் நிலைமை இதுதான். பல ஆண்டுகளாக நாம் இதையே பார்த்து வருகிறோம். மாற்றம் உடனடியாக ஏற்படாது; அதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அது நிச்சயமாக நடக்கும்.
அதேநேரத்தில், பெண்களைப் பற்றிய படங்களும் தயாரிக்கப்படுகின்றன; அவற்றுடன் தொடர்புடைய படங்களும் நல்ல வியாபாரத்தை ஈட்டுகின்றன. வீரம் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. பெண்களும் ஹீரோக்களாக நடிக்க முடியும். இது நம்நாட்டில் அரிதாகவே தயாரிக்கப்படுகிறது.
வணிகப் படங்களில் நடித்தால் உண்மையானவராக இருக்க முடியாது என்ற மனநிலை பாலிவுட்டில் உள்ளது. நான் ஒவ்வொரு படத்தையும் முழு மனதுடன் செய்கிறேன். பார்வையாளர்கள் அதை விரும்பியதால் நான் இங்கே இருக்கிறேன். நான் அடுத்து, நீரஜ் பாண்டேவின் படத்தில் நடிக்கிறேன். அது எனக்கு மிகவும் நெருக்கமானது. இது ஒரு த்ரில்லர். பெண்கள் பேசாத ஒரு மிக முக்கியமான பிரச்னை பற்றி அது பேசுகிறது” என அதில் தெரிவித்துள்ளதாக 'இந்தியா டுடே' ஊடகம் தெரிவித்துள்ளது.

