LEO முதல் காட்சி எப்போது? - உள்துறை செயலரை சந்தித்த பின் வழக்கறிஞர்கள் குழு சொன்ன தகவல்!

லியோ படத்தின் சிறப்புக் காட்சி வெளியீடு குறித்து லியோ திரைப்பட வழக்கறிஞர்கள் குழுவினர் உள்துறை செயலர் அமுதாவை சந்தித்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் செப் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் புதிய புதிய சிக்கலும் நாளுக்கு நாள் வந்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில் படத்தின் சிறப்புக் காட்சி வெளியீடு குறித்து லியோ திரைப்பட வழக்கறிஞர்கள் குழுவினர் உள்துறை செயலர் அமுதாவை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com