'ஜெகதீஷ் to அர்ச்சனா கல்பாத்தி..' அரசு பதவிகளில் அமர்த்தப்படும் விஜய்யின் படக்குழுவினர்!
முதல்வர் விஜய்யின் படக்குழுவினருக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கும் நடைமுறை தொடர்கிறது. ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா டெல்லி சிறப்புப் பிரதிநிதி, லியோ தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி முதல்வரின் தனிச்செயலர், பீஸ்ட் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா திரைப்படப் பயிற்சி நிறுவனத் தலைவர், கோட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கோயில் அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினராக நியமனம்.
முதல்வர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் தொடர்ந்து அரசுப்பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லியோ படத்தின் தயாரிப்பாளரும், விஜய்க்கு அணுக்கமானவருமான ஜெகதீஷ் பழனிசாமி, முதல்வரின் தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, தமிழ்நாடு அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வரிசையில் தற்போது கோட் படத்தின் தயாரிப்பாளர்அர்ச்சனா கல்பாத்தி, கோயில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினராகப்பதவி பெற்றுள்ளார்.

