”படிக்கலைனு ஒரு ஏக்கம் இருந்துச்சு; ஆனா இன்று..” விருது விழாவில் பெருமிதம் கொண்ட நடிகர் சூரி!
இவ்விழாவில் பேசிய நடிகர் சூரி, “பெண்கள் இல்லாமல் வாழ்வில் எந்தவொரு வெற்றியும் முழுமை அடைந்தது கிடையாது. அம்மாவாக இருக்கலாம், மகளாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம்.
முதுகைப் பிடித்து முன்னோக்கிக் கொண்டுசெல்லும் சக்தியாக பெண்கள் இருக்கிறார்கள். சக்தி விருது பெண்களுக்கான விருது மட்டும் கிடையாது. இது அந்த குடும்பத்திற்கான வெற்றியாக நினைக்கிறேன். அவர்களின் நம்பியவர்களுக்கான விருதாக நினைக்கிறேன். பெண் உயரும்போதுபோது அவர்கள் மட்டும் உயர்வது கிடையாது. பல பெண்களின் கனவும் சேர்ந்து உயர்கிறது. அவர்களுக்கான விருதுக்கான மேடைதான் இது. விருதுபெற்ற அனைவருக்கும், பெண்களுக்கும் எனது அம்மாவுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.
நான் இந்த இடத்தில் இருப்பது என்றால் எனது அம்மாதான் காரணம். இந்த வெற்றிக்குப் பின்னால் அவருடைய அம்மாவும் அக்காவும் சகோதரிகள்தான் இருக்கிறார்கள். பெண்கள் குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்குவதற்கு கஷ்டப்படுகிகிறார்கள். ஒவ்வொரு பிள்ளைங்களை பெற்று வளர்ப்பது கஷ்டம் என்பது, ராணுவத்திற்கு சமம்தான். ஐஏஎஸ் கவிதா ராம் அவர்களுக்கு விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐஏஎஸ் அதிகாரியாக நீங்கள் பல பொறுப்புகளை பெற்று சாதனைகளை படைத்தவர்கள்.
பொறுப்பு என்பது அவர்களுக்கு அடையாளம் கிடைக்கலாம். ஆனால் அந்த அடையாளத்தை வைத்து மற்றவர்கள் என்ன நல்லது பெற்றிருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். உங்களுடைய அற்புதமான பணியின் காரணமாக பல நல்லதை செய்து இருக்கிறீர்கள். சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி என்று சொல்வார்கள். ஆனால் பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி. பல நாள் நான் பெரிதாக படிக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் ஐஏஎஸ் அவர்களுக்கு விருது வழங்கக்கூடிய நிலை என்பது பெரிதாக பார்க்கிறேன்” என்றார்.

