வடிவேலு
வடிவேலுpt web

“நியாயம்ன்னு ஒன்னு இருக்குல..” அமெரிக்காவின் நாட்டாமைத் தனம்.. அன்றே கண்டித்த வடிவேலு! #viralvideo

அமெரிக்காவின் பெரியண்ணன் தனத்தை அன்றே கண்டிப்பதுபோன்று வடிவேலுவின் காமெடிக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

உலக அளவில் பெரியண்ணன் மனப்பான்மையில் நடந்துகொள்ளும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் தலையிடுவது, ஒரு நாட்டில் ஆயுதங்கள் இருக்கிறதா என கேட்டு தாக்குதல் நடத்துவது என மூக்கை நுழைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்கா தனக்கு பலம் அளிக்காத எந்தவொரு வேலையிலும் தலையிடாது என்பது உலகம் அறிந்ததே.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்pt web

சில தினங்களுக்கு இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் சம்பந்தப்பட்ட இருநாடுகளை காட்டிலும் அதிகம் பேசியது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்தான். தன்னுடைய தலையீட்டால்தான் இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாக நாள்தோறும் சொல்லிக்கொண்டு வந்தார். இந்தியா தரப்பில் அதனை மறுத்தபோதும் ‘இல்லை இல்லை நான்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன்.. என்னுடைய பேச்சைக்கேட்டு தான் இருநாடுகளும் நிறுத்தின’ என சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த வகையில்தான் தற்போது ஈரான் - இஸ்ரேல் மோதலிலும் ட்ரம்ப் அதேபாணியில் தலையிட்டு நடந்து கொண்டு வருகிறார். ‘இருநாடுகளும் கேட்டுக்கொண்டதற்கு இணந்த இருவரையும் போர் நிறுத்தத்தை ஏற்குமாறு தான் சொன்னதாகவும் அதனை இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் ட்ரம்ப் சொன்னார். அவர் சொன்ன பிறகும் மோதல் நீடித்தது வேறு கதை.

வடிவேலு
இனிமே இதுதான் ஆதிக்கத்தின் அளவுகோல்.. உலகை இரண்டாகப் பிளக்கப்போகும் AI!!

இரண்டாம் உலகப் போருக்கு பிறகாகவே அமெரிக்காவின் செயல்பாடு இப்படித்தான் இருந்து வருகிறது. அதுவும் சோவியத் யூனியன் உடனான பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு,, அதாவது சோவியத் உடைந்த பிறகு அமெரிக்காவின் செயல்பாடு உச்சத்தை தொட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் நுழைந்தார்கள்.. ஈராக்கில் நுழைந்தார்கள் இன்னும் பல நாடுகளில் அமெரிக்காவின் படைகள் நுழைந்து தாங்கள் விரும்பும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். இப்படித்தான் சதாம் உசேன் காலத்தில் ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி அமெரிக்கா உள்ளே நுழைந்தது.

இப்படியான அமெரிக்காவின் அரசியலை நம்முடைய வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய படத்தில் தெளிவாக பேசியிருப்பார். அன்பு என்ற படத்தில் வரும் காமெடி காட்சியில் புஷ் காலத்தில் ஈராக்கில் நடந்த அத்துமீறலை சொல்லி இருப்பார். அந்தக்காட்சியில் வடிவேலு, சிங்கமுத்து, அல்வா வாசு நடித்திருப்பார்கள். சிங்கமுத்துவும், அல்வா வாசுவும் ஒரு டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு செல்லும் வடிவேலு அவர்களுடன் உரையாடுவார். அப்பொழுதுதான், ‘சதாம் உசேனுக்கு ஜார்ஜ் புஷ் எச்சரிக்கை’ என்று பேப்பரில் வந்த தலைப்புச் செய்தியை படிப்பார் சிங்கமுத்து. அதற்கு அருகில் இருக்கும் அல்வா வாசு, ‘புஷ்ஷுக்கும் சதாம் உசேனுக்கு என்னன்னே தகராறு..’ என்று கேட்பார். அந்தக் கேள்விக்கு, “ஒரு பிரச்னையும் கிடையாது.. நம்ம ஊர்ல ஊருக்கு ஊரு கட்டப்பஞ்சாயத்து இருக்குல.. அதுமாதிரி உலகத்துக்கே கட்டப்பஞ்சாயத்து காரணம் அமெரிக்கா காரன்” என்று சிங்கமுத்து பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வடிவேலு இடைமறித்து ’நினைக்கிறாப்டி.. பஞ்சாயத்து பண்ணனும்னு நெனக்கிறாப்டி.. அதச் சொல்லு..’ என்று பேசுவார்.

வடிவேலு
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் | அதிகாரிகளுக்கே தெரியாமல் நடந்த ரகசியம் என தகவல்!

வடிவேலு சொன்ன நியாயம்

அதற்கு சிங்கமுத்து, ‘அதாவது ஈராக்கு கிட்ட அணு ஆயுதம் இருக்கானு அமெரிக்காக்காரன் கேக்குறான். கூட்டிக்கொண்டு போய் காட்டிட வேண்டியதுதானே..’ என்று சொல்ல வடிவேலு அதற்கு விரிவாக விளக்கம் கொடுத்து பேசுவார். அதாவது, “ஆங்ங்.. நீ காட்டுவல நீ காட்டுவ.. சம்மந்தமே இல்லாதவன் உன் வீட்டுக்குள்ள வந்து சாமான் செட்டு எவ்ளோ இருக்கு, நகை நட்டு எவ்ளோ இருக்குனா நீ காட்டுவியா.. சின்னபயலா இருக்கட்டும், பெரிய பயலா இருக்கட்டும்.. நியாயம்னு ஒன்னு இருக்குல.. நீ ஊருக்கு பெரிய ஆளா இருக்கலாம்.. அதுக்காக ரோட்டுல போறவன பூரா கூப்புட்டு உன் கையில என்னா இருக்கு.. உன் வீட்டுல என்னா இருக்கு.. உன் சாமா செட்டு என்ன இது என்னனு கேட்டா என்ன நியாயம்..” என்று சொல்லி முடிப்பார்.

அமெரிக்காவின் நாட்டாமை அரசியலை போகிற போக்கில் காமெடி காட்சியில் தெளிவாக பேசியிருப்பார் வடிவேலு.. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com