Trisha Krishnan, vijay
Trisha Krishnan, vijaypt web

கனவுகள் நனவாகட்டும்... விஜய்க்கு த்ரிஷா வாழ்த்து! | Trisha | Vijay

விருது விழா ஒன்றில் பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி, அவர்கள் பற்றிய கேள்விகளையோ, நினைவுகளையோ பகிர்ந்து கொள்ளுமாறு த்ரிஷாவிடம் கேட்கப்பட்டபோது விஜயிந் அரசியல் பயணத்திற்கு த்ரிஷா பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. துபாயில் நடந்த விருது விழா ஒன்றில், தென்னிந்திய சினிமாவில் த்ரிஷாவின் 25 ஆண்டுகால பங்களிப்பை பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி, அவர்கள் பற்றிய கேள்விகளையோ, நினைவுகளையோ பகிர்ந்து கொள்ளுமாறு த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

விஜயின் புகைப்படத்தை காட்டியதும் "உங்கள் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவருக்கு என்ன கனவுகள் இருந்தாலும் அவை நனவாக வேண்டும், ஏனென்றால் அதற்கு அவர் தகுதியானவர்" எனக்கூறி விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகளை பகிர்ந்தார் த்ரிஷா.

Trisha Krishnan, vijay
`பாகுபலி'யில் ஸ்ரீதேவி.. சிவகாமியாக நடிக்க முடியாமல் போனது ஏன்? - போனி கபூர் ஆதங்கம்|Baahubali

அஜித் கனிவானவர்

Vidaamuyarchi
VidaamuyarchiAjithkumar

அஜித்குமாரின் புகைப்படம் காட்டப்பட்டபோது "நான் அவருடன் பணியாற்றிய போது கவனித்தது, அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர். அவர் மனநிலை எப்போதும் மாறியதே இல்லை. சக நடிகர்கள் துவங்கி, லைட் மேன் வரை எல்லோரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்வார். நம்பமுடியாத அளவு கருணையுள்ளம் கொண்டவர்." எனத் தெரிவித்தார்

Kamalhaasan
KamalhaasanKamalhaasan

கமல்ஹாசன் புகைப்படம் காட்டப்பட்டதும் "கமல் சார் எப்படி இப்படி இருக்கிறீர்கள், எப்போதும் மிகவும் கவர்ச்சியாக, மிடுக்காக இருக்க எப்படி முடிகிறது? இதைதான் எல்லோரும் கேட்பார்கள் என நினைக்கிறேன்" என்றார் த்ரிஷா. தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகின்றன.

Trisha Krishnan, vijay
ரேஸிங் வழியே இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் நடிகர் அஜித்!| Ajith kumar | AK | AjithKumarRacing

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com