\
trisha vs mansoor
trisha vs mansoorfile image

மன்சூர் அலிகானை மன்னிப்பதா தண்டிப்பதா? போலீஸுக்கு நடிகை த்ரிஷா கொடுத்த பதில்!

மன்சூர் அலிகான் மீதான வழக்கு விவகாரத்தில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் விளக்கம் கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார்.
Published on

சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க, திரையுலத்தினர் பலரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடக்கத்தில் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று சொன்ன மன்சூர் அலிகான், விசாரணைக்கு ஆஜரான பின் அடுத்தடுத்த நாட்களில் தன் பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இதுதொடர்பாக, ட்வீட் செய்த த்ரிஷாவும் தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம் என்று பதிவிட்டிருந்தார்.

trisha vs mansoor
மன்சூர் அலிகான் விவகாரம் - நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்!

இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால், நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகை த்ரிஷாவிடம் போலீஸார் கேட்டிருந்தனர். இதற்கு தற்போது பதிலளித்துள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்திற்கு இதோடு முற்றுவைக்கப்பட்ட நிலையில், சட்ட ஆலோசனைக்கு பிறகு போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

trisha vs mansoor
BiggBoss7: “பொளிச்..பொளிச்னு வச்சு செய்வேன்” “எங்க செய்யுங்க..” விஷ்ணுவிடம் ஆவேசம் காட்டிய அர்ச்சனா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com