BiggBoss7: “பொளிச்..பொளிச்னு வச்சு செய்வேன்” “எங்க செய்யுங்க..” விஷ்ணுவிடம் ஆவேசம் காட்டிய அர்ச்சனா!

“நீங்க தண்டம்” என்று விஷ்ணு சொல்லவும், அர்ச்சனா கோவத்தில் அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியை கையில் எடுத்து விஷ்ணுவை பார்த்து “நீங்க இது தான் என்கிறார்.”
விஷ்ணு
விஷ்ணுபிக்பாஸ் விஜய் டீவி

பிக் பாஸ் 59ம் நாள்.. சூப்பர் பவர் டாஸ்க்!

பிக்பாஸ் வீட்டிலிருப்பவருக்கு சூப்பர் பவர் கொடுக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற டாஸ்கில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்ல நம்ம விஷ்ணு ”எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால் ஒவ்வொருத்தர் மனசையும் படித்து, அவங்க என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு அதற்கு தகுந்தமாதிரி பொளீர்..பொளீர்ன்னு டயலாக வச்சு செய்யவேன்” என்ற கையை அறைவது போல் காட்டினார்.

இந்த மணியும் ரவீனாவும், சும்மா இருக்காமல், இது உங்களுக்கானது என்று அர்ச்சனாவைப் பார்த்து சிரிக்க…. இதை மனதில் வைத்துக்கொண்டார் அர்ச்சனா.

விஷ்ணு
BiggBoss 7: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா! பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளாதது ஏனோ!

அடுத்ததாக, மாயா கூறும் பொழுது, "நான் ஒரு வாரம் தப்பு பண்ணி இருக்கேன். எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால், நான் தப்பு பண்ணிய அந்த நாளுக்கு போய் அத சரி பண்னிவிடுவேன்" என்கிறார்.

நான் ஒரு வாரம் தப்பு பண்ணி இருக்கேன். எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால், நான் தப்பு பண்ணிய அந்த நாளுக்கு போய் அத சரி பண்னிவிடுவேன்

மாயா சொல்லும் பொழுது, “இந்த வீட்டுல விளையாடுறதுன்னா நாலு பேர் தான், மத்தவங்க எல்லாரும் சும்மாதான் இருக்காங்க.. எனக்கு சூப்பர்பவ்ர் கிடைத்தால், சும்மா இருக்குறவங்களை என் கண்ணால பாத்து கீத்து அவங்கள கேம் விளையாட வப்பேன்” என்கிறார்.

நம்ம மைண்ட் வாய்ஸ்: “ஆமாம்மா… உங்க அகராதில, கேம் விளையாடுறதுன்னா சண்டை போட்டுகறது; இல்லைன்னா அடுத்தவங்களுக்கு குழி பறிக்கிறது, இதுதானே? அந்த நாலு பேரு லிஸ்ட சொல்லிட்டா நல்லா இருந்திருக்கும்.

இந்த டாஸ்க் முடிந்ததும், சாவகாசமா அர்ச்சனா விஷ்ணுவிடம் சண்டையிட வருகிறார், “ நீங்க ஏதோ புளிச்… புளிச்சுன்னு அடிப்பேன்னு சொன்னீங்களே அடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்” என்கிறார். இது வடிவேலு சண்டைக்கு வாடா…னு சொன்ன காமெடி போலவே இருந்தது.

பாவம் விஷ்ணு, “அத நான் உங்களுக்கு சொல்லல… உங்களுக்கு சொன்னமாதிரி ஏன் எடுத்துகறீங்க” என்று பரிதாபமாக தான் கேட்டார்.

நீங்க ஏதோ புளிச்… புளிச்சுன்னு அடிப்பேன்னு சொன்னீங்களே அடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்
அர்ச்சனா
அர்ச்சனாவிஜய் டீவி

அப்படீன்னா, வேற யார சொன்னீங்க… சொல்லுங்க” என்று சண்டையிடுகிறார் அர்ச்சனா.

ஏங்க நா உங்கள சொல்லல… எனக்கு சூப்பர் பவர் கிடைச்சா எப்படி இருக்கும்னு தான் சொல்ல வந்தேன். அத நீங்க ஏன் உங்க கேரக்டரோடு பொருத்தி பார்கறீங்க” என்று விஷ்ணு கேட்க… சண்டை ஆரம்பிக்கிறது. இவர்கள் சண்டை ஒரு பக்கம் ஓட மத்தவங்க ஜாலியாக சொல்லிவச்சாப் போல ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க….  நம்ம மைண்ட் வாய்ஸ்: “அடேய் என்னடா நடக்குது இங்க….?”

அர்ச்சனா வரவர எல்லோர்கிட்டையும் ரொம்பவே சண்டையிறாங்க.. விஷ்ணுக்கு முன்னாடி போய் நின்னு ”உங்களுக்கு தைரியம் இருந்தா எங்கே அடிங்க பாப்போம்”னு முன்னாடி நிக்குறாங்க. இது தான் சமயம்னு விஷ்ணு பேசலாம், ஆனா அர்ச்சனா கத்தி கத்தி பேசவும் பயந்துட்டாரு போல. அத்தோட விடல அர்ச்சனா மீண்டும் மீண்டும் பிரச்னை செய்யவும், “நீங்க தண்டம்” என்று விஷ்ணு சொல்லவும், அர்ச்சனா கோவத்தில் அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியை கையில் எடுத்து விஷ்ணுவை பார்த்து “நீங்க இது தான் என்கிறார்.” கமலுக்கு ஆடவரை பெண்டீர்கள் தரம் தாழ்த்தினால் பிடிக்காது. அர்ச்சனாவின் இத்தகைய செயலுக்கு அவர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம். இனி ரெண்டு நாளுக்கு விஷ்ணு அமைதியா இருப்பாரு என்று எதிர்பார்க்கலாம்.

பாவம் நிக்சன் கேப்டன் பதவியை கையில் எடுத்துக்கொண்டு பொம்மையாகவே இருக்கிறார். “பாருங்க மம்மி காலையிலிருந்து ஒரு காப்பி குடிக்கமுடியல… ஒரே பிரச்னையாக இருக்கு…” என்று பரிதாபமாக சொல்கிறார்.

இந்த வாரம் ஆளாளுக்கு கத்துறதை பார்த்தா நமக்கு தலைவலி தான் வருகிறது. இவங்க சத்தத்த குறைக்க முடியாது டீவி சத்தத்தை முறைக்கலாம்னு பார்த்து 1 நம்பர்ல வச்சாலும் சத்தம் குறையல….

அர்ச்சனா அங்க கத்தி இங்க கத்தி, கடைசில ‘இந்த வீட்டுக்கு வந்ததும் விஷ்ணு அண்ணா மேலதான் எனக்கு மரியாதை இருந்தது; அவர் தான் என்கிட்ட வந்து அன்பா பேசினாரு” என்று அந்தர் பல்டி அடிக்கும் போது, இத்தனை நேரம் பிக்பாஸ் பார்த்துட்டு இருந்த நாம என்ன லூசான்னு ஒரு ஃபீலிங் எழத்தான் செய்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com