Top 10 Cinema news
Top 10 Cinema newsPT

Top 10 சினிமா செய்திகள்| அஜித்தின் புது ஸ்டைல் போட்டோ வைரல்.. நாளை ’வணங்கான்’ பட இசை வெளியீட்டு விழா

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
Published on

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிர்பார்ப்பு

சிவகார்த்திகேயனின் 23வது பட டைட்டில் டீசர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதால், விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.

2. 'ஆர்ஆர்ஆர்' - ஆவணப்படத்தின் ட்ரெய்லர்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவான விதத்தை, தற்போது படக்குழு ஆவணப்படுத்தி உள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு RRR Behind & Beyond என தலைப்பிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவுள்ளது.

3. ’கூரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ’கூரன்’. இப்படத்தை, நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

4. இசை நிகழ்ச்சி குறித்து பஞ்சாபி பாடகர் தில்ஜித் அறிவிப்பு

”நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாதவரை இந்தியாவில் இனி நேரலை இசைக் கச்சேரிகளை நடத்த மாட்டேன்” என்று பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் அறிவித்துள்ளார். சண்டிகரில் அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடியதை அடுத்தே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்த கன்சர்ட்டை, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அர்ப்பணித்திருந்தார்.

Top 10 Cinema news
Top 10 சினிமா செய்திகள் | டப்பிங் பணிகளை முடித்த சசிகுமார் To மருதமலை முருகன் கோயிலில் த்ரிஷா!

5. ஸ்டைலாக நடந்துவரும் அஜித்தின் புகைப்படம் வைரல்

நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம், ’விடாமுயற்சி’. இந்நிலையில் படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக டக்சிடோ கோட் சூட் அணிந்து நடந்துவருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

6. ’அலங்கு’ படக்குழுவினரைப் பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘அலங்கு’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” ‘அலங்கு’ திரைப்படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள். படத்தின் ட்ரெய்லர் மிகவும் சுவாரச்யமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. 'நிறங்கள் மூன்று' படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு

இயக்குநர் கார்த்திக் நரேன் சமீபத்தில் இயக்கி வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இத்திரைப்படம் கடந்த நவம்பர் 22ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் 20ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம், ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஆகியவற்றில் வெளியாகவுள்ளது.

Top 10 Cinema news
Top 10 சினிமா செய்திகள்|சூர்யாவுடன் மீண்டும் இணைந்த த்ரிஷா To இளையராஜாவின் முதல் சிம்பொனி!

8. ’சொர்க்கவாசல்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் ’சொர்க்கவாசல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

9. நாளை ’வணங்கான்’ பட இசை வெளியீட்டு விழா

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வணங்கான்’. இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறவடைந்த நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக இந்த விழா அமையவுள்ளது.

10. ‘மழையில் நனைகிறேன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால் நடித்துள்ள படம், ‘மழையில் நனைகிறேன்’. இத்திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக இப்படம் அன்று வெளியாகவில்லை. திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Top 10 Cinema news
Top 10 சினிமா செய்திகள்| ரஜினியின் ‘தளபதி’ ரீரிலீஸ்.. டிரெண்டிங்கில் 2வது இடத்தில் ’லக்கி பாஸ்கர்’!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com