சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்எக்ஸ் தளம்

Top 10 சினிமா செய்திகள் | டப்பிங் பணிகளை முடித்த சசிகுமார் To மருதமலை முருகன் கோயிலில் த்ரிஷா!

பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
Published on

ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார் 'டூரிஸ்ட் பேமலி' படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஐந்தாவது படமாக டூரிஸ்ட் பேமலி உருவாகி வருகிறது. இந்த படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஒப்பனை செய்த நேரத்தில் நடனமாடிய ஷோபிதா

திருமணத்துக்கு முன் ஒப்பனை செய்த நேரத்தில் ஷோபிதா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை ஷோபிதாவுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமண தினத்தன்று ஒப்பனை அறையில் புத்தாடை உடுத்தி அழகு பார்த்த ஷோபிதா, மகிழ்ச்சியில் அசத்தல் நடனமாடினார்.. ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற முகபாவனையோடு அவர் ஆடிய நடனம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

3. மூன்றாம் சீசனுடன் நிறைவடைய உள்ள ’ஸ்குவிட் கேம்’

பிரபல தென்கொரிய வெப் தொடரான ’ஸ்குவிட் கேம்’ மூன்றாம் சீசனுடன் நிறைவடைய உள்ளதாக அதன் இயக்குநர் ஹ்வாவ் டாங் - ஹியூக் தெரிவித்துள்ளார். இந்த சீசனுக்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு மூன்றாம் சீசன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஸ்குவிட் கேம் முதல் சீசன். வெளியான முதல் நான்கு வாரங்களில் 165 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. வரும் 26ஆம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

4. சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயகும் சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குவதாகவும், அதில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருப்பதாகவும், படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் படத்தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சினிமா செய்திகள்
Top 10 சினிமா செய்திகள்|சூர்யாவுடன் மீண்டும் இணைந்த த்ரிஷா To இளையராஜாவின் முதல் சிம்பொனி!

5. 'விடுதலை-2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

’விடுதலை 2’ இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். ’விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், 'விடுதலை-2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

6. கவுதம் வாசுதேவ் மேனன் நெகிழ்ச்சிப் பதிவு

இன்றுடன், ,நீதானே என் பொன்வசந்தம், திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தபோது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் இசை எனக்காவும், நமக்காகவும், இந்த மொத்த உலகத்துக்காகவும் இளையராஜா கொடுத்த அன்பின் வெளிப்பாடு!" எனப் பதிவிட்டுள்ளார்.

7. மருதமலை முருகன் கோயிலில் த்ரிஷா சாமி தரிசனம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

சினிமா செய்திகள்
Top 10 சினிமா செய்திகள்| ரஜினியின் ‘தளபதி’ ரீரிலீஸ்.. டிரெண்டிங்கில் 2வது இடத்தில் ’லக்கி பாஸ்கர்’!

8. ஜெயம் ரவியின் படத்தை இயக்கும் கணேஷ் கே.பாபு

ஜெயம் ரவியின் 34வது படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

9. குழந்தைக்கு தாயான ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே, பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம்தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். தற்போது, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். ஆனால் என்ன குழந்தை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது நண்பர்கள் பெண் குழந்தை என தெரிவித்துள்ளனர்.

10. 'காதல் என்பது பொதுவுடைமை' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. இதில், 'ஜெய் பீம்' நடிகை லிஜோ மோள் ஜோஸ் கதையின் நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சினிமா செய்திகள்
இன்றைய Top 10 சினிமா செய்திகள்: ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் முதல் ரூ.922 கோடி வசூலித்த புஷ்பா 2 வரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com